நிர்பயா (2) – சொர்க்கத்தின் விதிகளை நரகத்தில் பேசாதீர்கள் நண்பர்களே!

நிர்பயா கட்டுரையின் தொடர்ச்சி இது: இந்தியா ஒரு நரகம்.  துப்புரவு தொழிலாளியின் சம்பளம் இங்கே 7000 ரூ.  என் பகுதியில் 5000 ரூ.  தினமும் அவர்கள் என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்கிறார்கள்.   50 ஆண்டுகளுக்கு முன்பே நாகூரில் நான் வாழ்ந்த சேரியில் சோற்றுப் பிச்சை.  இப்போது நவீன காலம்.  சோற்றுக்குப் பதில் ரூபாய்.  நூறு இருநூறு என்று.  மத்திய வர்க்க மென்பொருள் பொறியாளனின் ஊதியம் ஒன்றரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை.  இதே சென்னையில். … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங்

முகநூலில் நண்பர் கார்ல் மேக்ஸின் பதிவைப் படித்தேன்.  அவரது பதிவுகள் எப்போதுமே எனக்கு அந்தக் காலத்து நிறப்பிரிகை கட்டுரைகளை நினைவுபடுத்துகின்றன.  முதலில் கார்ல் மேக்ஸ்: நிர்பயா வன்கொலையில் பங்குபெற்ற சிறுவன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்படும் நிகழ்வையொட்டி நேற்று சமூகவலைத்தளங்களில் நிலவிய ”மத்தியதர வர்க்க மனநிலையின் வன்முறை” அச்சமூட்டுவதாக இருந்தது. நிர்பயாவின் மரணம் யாரையும் கண்ணீர் சிந்தச்செய்யும் கொடுமைதான். அவள் எதிர்கொண்ட வன்முறையும், அதன் வழியே அடைந்த நிராதரவான மரணமும் எல்லா மனங்களையும் அசைக்கக் கூடியதே. அந்த … Read more

ரசிகனின் கேள்வியும் முட்டாளின் பதிலும்…

கேள்வி: என்னைப் பொருத்தவரை, இளையராஜாவிடம் அந்த இளைஞர் அதுபோன்ற கேள்வியை எழுப்பியதே மிகப்பெரிய தவறு என்று தோன்றுகிறது. நாம் பொருட்படுத்த வேண்டாத விஷயம் இது என்றும் தோன்றுகிறது. இளையராஜாவிடம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை… நாளைக்கு முதல் அமைச்சரின் ப்ரஸ் மீட் நடக்கும். அப்போதும் இதே கேள்வியை எவரேனும் கேட்பார்களா? கணேஷ் அன்பு. முட்டாளின் பதில்: கணேஷ், பொது இடத்தில் ஒரு அந்நிய மனிதரைப் பார்த்து, அதிலும் ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு … Read more

முட்டாளின் கடைசிச் சந்தேகம்!

இன்னும் ஒரு விஷயத்தை விட்டு விட்டேன்.  ஒரு அரசியல்வாதி  பொதுக்கூட்டத்தில் கையை ஓங்கி அடிக்கப் பார்ப்பார்.  சமயங்களில் அடித்தே விடுவார்.  பத்திரிகையாளர் கூட்டத்திலும் நாக்கைத் துருத்துவார், மிரட்டுவார்.  இப்படி இப்படி.  அவரைப் பற்றி நான் இதுவரை ஏதாவது கட்டுரை எழுதியிருக்கிறேனா?  ஏனென்றால், எங்கள் ஊரில் சொல்வார்கள்… மது அருந்தியவரும் குழந்தையும் ஒன்று என்று.  அது போகட்டும்.  இப்போது என் சந்தேகம் எல்லாம் அந்த அரசியல்வாதியும் இளையராஜாவும் ஒன்றா? அவர் செய்வதை இவர் செய்யலாமா?    

முட்டாளின் வருத்தங்கள் தொடர்கின்றன…

முட்டாளின் கேள்விகள் தொடர்கின்றன.  மன்னியுங்கள்.  ஒரு நண்பர் என்னைக் கேட்டிருந்தார்.  உங்களிடமும் பலர் ஏடாகூடமாகக் கேள்வி கேட்கும் போது நீங்களும்தான் கோபப்படுகிறீர்கள்.  இசைஞானி கோபப்பட்டால் மட்டும் தப்பா? கோபப்பட வேண்டாம் என்று யார் சொன்னது?  வன்முறையில் ஈடுபடலாமா என்பதுதான் கேள்வி.  வன்முறையா?  அவர் என்ன நிருபரை அடிக்கவா செய்தார் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.   வசைச் சொல்லை நேரடியாக, முகத்துக்கு நேராகப் பிரயோகிப்பது மிகக் கடுமையான வன்முறை.  சொல்லுங்கள், அந்தச் செய்தியாளரால் தன் வாழ்நாள் முடியுமட்டும் … Read more

ஒரு முட்டாளின் வருத்தங்கள், கேள்விகள், சந்தேகங்கள்…

அவர் பெயர் Nick Ut.  1972 ஜூன் எட்டாம் தேதி அன்று அவர் வியட்நாமில் எடுத்த ஒரு புகைப்படம் வியட்நாம் போரின் அவலத்தை உலகத்துக்குத் தெரிவித்தது.  அந்தப் புகைப்படம்: குண்டு வெடித்ததால் தோலெல்லாம் பிய்ந்த நிலையில் நிர்வாணமாக ஓடி வருகிறாள் ஒன்பது வயது சிறுமி.   செய்தி சேகரிப்பவர்களின் வேலையே இதுதான். குண்டு வெடித்துக் கொண்டிருக்கும். கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். செய்தியாளனோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பான். அவனுக்காகச் செய்யவில்லை. இந்த விஷயத்தை அவன் உலகத்துக்குச் … Read more