பார்த்தசாரதி கோவிலில் இஸ்லாமிய சகோதரர்கள் – மக்கள் இயக்கம் – தொடர்ச்சி

சென்ற பதிவில் ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. இந்தப் பேரிடர் மனிதரிடையே இருந்த மத வித்தியாசத்தைக் கூட அகற்றி விட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அங்கே வசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் இதுவரை சென்றிருக்க வாய்ப்பில்லை. இப்போது அந்தக் கோவிலில் அவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அண்டாக்களில் சமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதைத்தான் மக்கள் இயக்கம் என்றேன்.  இதையும் சென்ற பதிவோடு சேர்த்து வாசிக்கவும்.

சென்னை மழை – மக்கள் இயக்கம்

இதுவரை சமூக வலைத்தளங்கள் மீதான என்னுடைய அவநம்பிக்கை அகன்று விட்டது.  சமூக வலைத்தளங்கள் மூலம்தான் இந்தப் பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்றும் செய்திகளும் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.   ஆர்ஜே பாலாஜி, நடிகர் சித்தார்த் போன்றவர்கள் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  பொதுவாக எந்தக் காரியத்திலும் தலையிட்டுக் கொள்ளாத பிராமணர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாசலில் அண்டாவை வைத்து ஆயிரம் பேருக்கு சமையல் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மீனவர்கள் படகில் போய் மக்களை ஏற்றிக் கொண்டு வருகிறார்கள். … Read more

ஸ்ரீலஸ்ரீ மனுஷ்ய புத்திரன் சுவாமிகள்

இன்று பதினோரு மணி அளவில் மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குப் போனேன்.  டிசம்பர் என்றால் மட்டும் வீட்டுக்கு வருகிறீர்கள் என்றார் கிண்டலுடன்.  எனக்குப் புத்தக விழாவின் மீது என்றைக்குமே மரியாதை கிடையாது.  புத்தக விழா சமயத்தில் என் புத்தகம் வர வேண்டும் என்ற எண்ணமே எனக்கு அசூயையை வரவழைக்கக் கூடியது.  காரணம், எந்த ராஜா எந்தப் பட்டிணத்துக்குப் போனாலும் பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் அதிகபட்சம் 5000 பிரதிகளே போகின்றன.  இதில் டிசம்பர் மாதம் பதிப்பாளரைச் சந்திப்பதில் என்ன பயன்? … Read more