Tag Centre நிகழ்ச்சி

நேற்றைய தினம் Tag centre-இல் நடந்த ராஸ லீலா விமர்சனக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்ததாகவே நினைத்தேன்.  ஆனால் அரங்கத்துக்கு வெளியே ஒரு அசிங்கமான சம்பவம் நடந்திருக்கிறது.  அதாவது, சுமார் ஐம்பது வாசகர்கள் – அவர்கள் அனைவரும் வாசக வட்ட நண்பர்கள் – என்னுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் – மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  நீங்களெல்லாம் யார், உங்களையெல்லாம் யார் அழைத்தது, இன்விடேஷன் இல்லாமல் உங்களையெல்லாம் யார் வரச் சொன்னது என்பது போன்ற … Read more

தினமலர் மற்றும் தினகரன் தீபாவளி மலர்கள்

தினகரன் தீபாவளி மலரில் சாரு நிவேதிதாவின் பேட்டி வெளியாகியுள்ளது. கடைகளில் கிடைக்கிறது. நண்பர்கள் படிக்கவும். தினமலர் தீபாவளி மலரில் ‘சினிமாவும் இலக்கியமும்’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. நாளை (27.10.16, வியாழன்) கடைகளில் கிடைக்கும். – ஸ்ரீராம்

ராஸ லீலா

நேற்று மாலை நடந்த ராஸ லீலா கூட்டத்தைப் பதிவு செய்து நேற்று இரவே பதிவேற்றம் செய்துள்ள நண்பர் ஷ்ருதி டிவி கபிலனுக்கு என் மனமார்ந்த நன்றி. சாரு உரை மற்றும் கேள்வி பதில்:   அழகியசிங்கரின் விமர்சன உரை:

சென்னையில் நல்ல உணவு ஏன் இல்லை?

பிரபாகரன் உணவக உரிமையாளர் முத்துராமலிங்கம் அந்திமழை கட்டுரைக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நல்ல சோறு என்று பாராட்டிய சாரு ஐயாவுக்கு நன்றி. ஆனா வடபழனியை கே.கே. நகர்ன்னு ஏரியா மாத்திப்போட்டுட்டீங்களே சார்….” https://www.facebook.com/muthu.ramalingam.7/posts/1113622118707349 *** என். சொக்கனும் அந்திமழை கட்டுரையைப் பாராட்டியிருக்கிறார்.   இருவருக்கும் நன்றி.  வடபழனியை கே.கே. நகர் என்று எழுதியது தவறுதான்.  டிஸ்கவரி புக் பேலஸுக்கு வரும் போதெல்லாம் பிரபாகரன் மெஸ்ஸுக்குப் போவதால் அதையும் கே.கே. நகர் என்று நினைத்து விட்டேன்.  கீழே என். சொக்கன் குறிப்பு: … Read more

ராஸ லீலா விமர்சனக் கூட்டம் – இன்று மாலை

ராஸ லீலா விமர்சனக் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. இடம்: TAG மையம், ஆழ்வார்பேட்டை. அரங்கில் சாரு நிவேதிதாவின் அனைத்து புத்தகங்களும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். போஸ்டர் வடிவமைப்பு: சுப்ரமணியன்