தலைமுறைகள்…

மேற்கண்ட இணைப்பில் லவ் ஷாட் என்ற பாடலைப் பற்றியும் கே.பாப் பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா?  அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பு வந்தவுடனேயே அராத்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.  அந்தப் பாடல் தொடங்கிய அடுத்த கணம் அவர் மகள் இமையா – வயது 12 – ஆ, எக்ஸோ என்று சொன்னாளாம்.  உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் தென் கொரிய இசைக் குழு எக்ஸோ.  எக்ஸோவின் பாடல்தான் லவ் ஷாட்.  இப்படியாகத்தான் நான் இளைஞர்களோடு சிறுவர்களோடு தொடர்பு கொள்கிறேன்.  … Read more

ஆமாஞ்சாமி

சென்ற 2014 தேர்தலில் மோடியை நான் தீவிரமாக ஆதரித்தவன் என்பதை மறந்து விடாமல் பின்வரும் விஷயங்களை வாசியுங்கள்.  அப்போது மோடியை ஆதரித்ததற்காக மிகக் கேவலமான வசைகளை வாங்கிக் கட்டிக் கொண்டவன் நான்.  அது கூடப் பரவாயில்லை.  மோடி எதிர்ப்பாளர்கள் என் நண்பர்களை மிரட்டி எனக்குக் கிடைத்த உதவியை நிறுத்தி என் வயிற்றில் அடித்தார்கள்.  துக்ளக்கிலிருந்து விடை பெறும்போது சோ சொன்னார், ”உங்கள் கட்டுரைகளுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது; உங்கள் கட்டுரை வர ஆரம்பித்த பிறகு துக்ளக்கை பெண்கள் … Read more