கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகத்தின் கண்ணதாசன் விருது அடியேனுக்கும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ள செய்தியை முன்பே உங்களிடம் பகிர்ந்திருந்தேன். விழா வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவையில் மாலை ஆறேகால் மணிக்கு நடைபெறும். அழைப்பிதழை இங்கே இணைத்திருக்கிறேன். அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறேன். விழா நடக்கும் இடம்: சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை