ராஜாவும் பாடிகார்டும்…

ஒரு ஊரில் ஒரு ராஜா. அவர் காட்டுக்கு வேட்டைக்குப் போனார். பாடிகார்டையும் அழைத்துக் கொண்டு போனார். பாடிகார்ட் பராக்கிரமசாலி. அன்றைய தினம் வேட்டையில் ஒரு விலங்கும் சிக்கவில்லை. கடுப்பான ராஜா பாடிகார்டிடம் சொன்னார், தம்பி நான் தூங்கப் போகிறேன். என் தூக்கத்தை யார் கெடுத்தாலும் கொன்று போடு என்று. மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தைச் சுற்றி ஒரு ஈ. ராஜாவும் தூக்கத்திலேயே கையால் அதை விரட்டி விரட்டிப் பார்த்தார். ஈ போன பாடு இல்லை. பார்த்தார் … Read more

கலையும் ஜனரஞ்சகமும்…

நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை.  நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் என்ற என் சிறுகதையைப் படித்திருந்தீர்களானால் நான் ஏன் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.  நம் தமிழ்ச் சமூகம் necrophelic மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது என்பது என் முடிவு. உயிரோடு இருக்கும் போது தெருநாயைப் போல் அலைய விட்டு விட்டு இறந்து போனதும் சிலை வைப்பதையும் மாலை போடுவதையுமே நெக்ரோஃபீலிக் மனப்பான்மை என்கிறேன்.  பாரதிக்குத் தமிழ்ச் சமூகம் செய்தது இதைத்தான்.  பாரதிக்கு … Read more

Pouch

எத்தனையோ பயணங்கள் போய் ஆயிற்று.  இன்னும் ஒரு பௌச் இல்லை.  ஆனால் பெண்கள் இம்மாதிரி விஷயங்களில் ரொம்பக் கெட்டி. நாலைந்து பௌச்கள் வைத்திருக்கிறார்கள்.  ஒன்று, முக அலங்காரத்துக்கு.  ஒன்று, கைபேசி வைத்துக் கொள்ள.  ஒன்று, உடம்பு அலங்காரத்துக்கு.  ஒன்று, பணம், பயணச் சீட்டு எல்லாம் வைத்துக் கொள்ள.   ஒரு பாடாவதி பௌச் இருக்கிறது.  பௌச் என்ற பெயருக்கே அவமானம்.  அதை என்னுடைய மாத்திரைகளை வைத்துக் கொள்ளப் பயன்படுத்துகிறேன்.  அதைப் பார்த்தாலே ஷேவிங் சாதனங்கள் வைத்துக் கொள்ளும் பௌச் … Read more