ராஸ லீலா கலெக்டிபிள்

ராஸ லீலா கலெக்டிபிள் பிரதிக்குப் பணம் செலுத்த இன்றே கடைசி நாள் என்று எழுதியிருந்தேன். ஒரு நண்பர் இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கச் சொல்லி எழுதியதோடு அல்லாமல் பணமும் அனுப்பிப் பதிவு செய்து கொண்டார். இன்று ராஸ லீலா பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விட்டேன். இனி ஒவ்வொருவருக்காக டெடிகேஷன் எழுத வேண்டும். அதை இரண்டு நாளில் முடித்து விடுவேன். சீக்கிரம் முடித்து விட்டு பெரூ-பொலிவியா- சீலே பயணத்துக்குக் கொஞ்சம் படிக்க வேண்டும். ஆயிரக் கணக்கான விஷயங்கள் … Read more

மௌனமும் பேச்சும்…

நேற்று ஜெயமோகனோடு பேசினேன். கோவை விழாவுக்கு அழைத்தேன். வருவதாக உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் கருத்து முரண்பாடுகள் என்று சொல்ல மாட்டேன். அவர் வட துருவம்; நான் தென் துருவம். இருவரும் இரண்டு வெவ்வேறு கருத்தியல்களையும் அழகியல் கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இது எங்கள் இருவருக்குமே தெரியும். இருந்தாலும் அது எங்கள் நட்பை ஒரு போதும் பங்கம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு ரத்த உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. அதாவது, யாரோடும் தொடர்பிலேயே … Read more

ஜென்மா

ஒரு இந்தியத் தாய். அவளுக்கு ஒரு மகன்.  மகனுக்கு ஒரு வயது ஆவதற்குள் கணவன் இறந்து விட்டான்.  வேறு எந்த ஆதரவும் இல்லாமல் மகனைத் தன் ரத்தத்தை வியர்வையாக்கிப் படிக்க வைத்தாள்.   மகன் பெரிய வேலைக்குப் போனான்.  கை நிறைய சம்பாதித்தான்.  அறுபது வயது ஆன அந்தத் தாய்க்கு ஏதோ பென்ஷன் கிடைக்கிறது.  மகன் எதுவும் பணம் அனுப்புவதில்லை.  அவனுக்கு ஏகப்பட்ட கடமைகள்.  அவனுடைய திருமணக் கடன் அடைக்க வேண்டும்.  வீடு வாங்கிய கடனை அடைக்க வேண்டும்.  … Read more