தஞ்சை ப்ரகாஷ் (மீண்டும்)

போகிற போக்கில் ஒருவர் வந்து ப்ரகாஷுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எழுதினார் அல்லவா? ப்ரகாஷின் கதைகள் மறு பதிப்பில் வரும்போது கொடூரமான அச்சுப் பிழைகளோடு வருவதைக் கண்டு நான் மிகவும் துயரம் கொண்டிருக்கிறேன். மனிதர், உயிரோடு இருக்கும்போதும் எவனும் கண்டு கொள்ளவில்லை. இறந்த பிறகு இப்படி அவமானப்படுத்துகிறார்களே என்று. பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். அவற்றின் அர்த்தம் யாருக்குமே புரியாது. கயாமத் கதையில் ஒரு இடத்தில் அங்கே தாவூத் நடந்து கொண்டிருந்தது என்று வருகிறது. இதற்கு யார் விளக்கம் சொல்வது? … Read more

கலைஞனும் சமூகமும்… (2)

ஜெ. பிரச்சினை பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.  யாருக்கும் பதில் சொல்லவில்லை.  காரணம், நான் எழுதியிருந்ததை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  அப்படிப்பட்டவர்களோடு என்னால் மல்லுக்கு நிற்க முடியாது.  பொதுவாக தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை மதிக்காத சமூகம்.  நடிகர்களாக இருந்தால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள்.  காதையும் நாக்கையும் அறுத்துப் போடுவார்கள்.  எழுத்தாளர்களையும் அப்படி வழிபடுங்கள் என்று சொல்லவில்லை.  அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.  ஆசான்களை அவமதிக்கும் சமூகம் இது.  தி.ஜ.ர. ஒரு மகான்.  ஆனால் … Read more

தஞ்சை ப்ரகாஷ்

”நிறைய வார்த்தைகளை உச்சரிப்பு புரியாமல் கையாண்டிருக்கிறார் பிரகாஷ்.”இப்படி ஒரு நண்பர் என் முகநூல் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். தஞ்சாவூர் இஸ்லாமிய வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவு செய்த முதல் எழுத்தாளர் பிரபஞ்சன். அவர் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு பெரிய அகராதியே போடலாம். அதற்காக அவருக்காக நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய்க்கு வந்ததைப் பேசக் கூடாது. ஒரு விஷயம் தெரிய வந்தால் அதன் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும். தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை ஒருவன் தன் … Read more