தலைமுறைகள்…

மேற்கண்ட இணைப்பில் லவ் ஷாட் என்ற பாடலைப் பற்றியும் கே.பாப் பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா?  அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பு வந்தவுடனேயே அராத்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.  அந்தப் பாடல் தொடங்கிய அடுத்த கணம் அவர் மகள் இமையா – வயது 12 – ஆ, எக்ஸோ என்று சொன்னாளாம்.  உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் தென் கொரிய இசைக் குழு எக்ஸோ.  எக்ஸோவின் பாடல்தான் லவ் ஷாட்.  இப்படியாகத்தான் நான் இளைஞர்களோடு சிறுவர்களோடு தொடர்பு கொள்கிறேன்.  … Read more

ஆமாஞ்சாமி

சென்ற 2014 தேர்தலில் மோடியை நான் தீவிரமாக ஆதரித்தவன் என்பதை மறந்து விடாமல் பின்வரும் விஷயங்களை வாசியுங்கள்.  அப்போது மோடியை ஆதரித்ததற்காக மிகக் கேவலமான வசைகளை வாங்கிக் கட்டிக் கொண்டவன் நான்.  அது கூடப் பரவாயில்லை.  மோடி எதிர்ப்பாளர்கள் என் நண்பர்களை மிரட்டி எனக்குக் கிடைத்த உதவியை நிறுத்தி என் வயிற்றில் அடித்தார்கள்.  துக்ளக்கிலிருந்து விடை பெறும்போது சோ சொன்னார், ”உங்கள் கட்டுரைகளுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது; உங்கள் கட்டுரை வர ஆரம்பித்த பிறகு துக்ளக்கை பெண்கள் … Read more

ராஸ லீலா – கலெக்டிபிள்

ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி முன்பு எழுதிய குறிப்பை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.  ஏனென்றால், பல நண்பர்கள் இது பற்றி எதுவும் தெரியாது என்றே சொன்னார்கள்.  சில நெருங்கிய நண்பர்களிடம் நானே தான் ஃபோன் செய்து ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.  சில நண்பர்களிடம் அது கூட சொல்லவில்லை.  அவர்களுக்கு இன்னமும் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்.  அமெரிக்காவிலிருந்து இரண்டு பேர்,  துபாய் ஷார்ஜாவிலிருந்து மூன்று பேர் இந்த கலெக்டிபிள் திட்டத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள்.  … Read more

k.pop – love shot

கே.பாப் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொரியன் பாப்பையே கே.பாப் என்கிறார்கள். வேகம், கூர்மை, துள்ள வைக்கும் தன்மை, இளமை – இது எல்லாம்தான் கே.பாப்பின் பொதுத் தன்மைகள். லவ் ஷாட் ஒரு புகழ்பெற்ற கே.பாப் ஸாங். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் அங்கே உள்ள பப்புகளுக்குப் போயிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், குழந்தை குட்டிகளோடு வாழும் உங்களால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் உங்கள் மகளுக்கோ மகனுக்கோ 18 வயது ஆகியிருந்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால், அவர்களின் … Read more

Boundless & Bare : Thanjai Prakash

தி.ஜானகிராமன், அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், சி.சு. செல்லப்பா, க.நா.சு. பற்றியெல்லாம் எவ்வளவோ எழுதியிருக்கிறேன்.  ஆனால் தஞ்சை ப்ரகாஷின் இடம் என்பது யாருமே நெருங்க முடியாதது.  அதாவது, ஜெயமோகன் அவரை போர்னோ எழுத்தாளர் என்கிறார்.  ஓ, தஞ்சை ப்ரகாஷ் கதையெல்லாம் எழுதுவாரா எனக்குத் தெரியாதே என்று தஞ்சை ப்ரகாஷின் 50 ஆண்டுக் கால நண்பர் வெங்கட் சாமிநாதன் ப்ரகாஷ் இறந்த பிற்பாடு எழுதுகிறார்.  (வெ.சா. பொய் சொல்லவில்லை; அதுவரை அவருக்கு நிஜமாகவே தெரிந்திருக்கவில்லை.)  இப்படியாக சமகால எழுத்தாளர்களால் போர்னோ … Read more