பயண ஏற்பாடுகள்… (பயணக் குறிப்புகள் – 5)

தலைக்கு மேல் வேலை.  இப்போதுதான் வங்கிக்குப் போய் பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கி வந்தேன்.  பொலிவியாவில் On arrival வீசா என்பதால் அங்கே கேட்பார்கள்.  அதில் ஒரு ‘இக்கு’ இருக்கிறது.  ஜூன் மாதத்துக்கான ஸ்டேட்மெண்ட்டும் சேர்ந்தால் வீசா மறுக்கப்பட்டு விடலாம்.  பயணத்துக்கே ஏழெட்டு லகரத்தை செலவழித்து விட்டதால் அப்புறம் சேமிப்பில் என்ன இருக்கும்?  வெறும் பூஜ்யங்களைக் காண்பிக்க முடியாது.  அதனால் பயண முகவருக்கு ஏழெட்டு லகரங்களை அனுப்புவதற்கு முன்பாக நம்மிடம் இருந்த பேலன்ஸை வைத்து ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும்.  … Read more

ரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…

நாளை நள்ளிரவு மூன்றரை மணிக்கு – சரியாகச் சொன்னால் நாளை மறுநாள் அதிகாலை – தோஹா விமானத்தைப் பிடிக்கிறேன்.  அங்கிருந்து சாவொ பாவ்லோ.  அங்கிருந்து லீமா.  மொத்தம் 36 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் போகும்.  பையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்.  இந்த நிலையில் பின்வரும் கடிதம் ஃப்ரான்ஸிலிருந்து வந்தது.  அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வணக்கம் , பிரான்ஸில் இருந்து வெளியாகும் ……………… இணைய சிற்றிதழ் அதனது ஆவணி இதழை தமிழக சிறப்பிதழாக … Read more