கண்ணதாசன் விழா

கோவை கண்ணதாசன் கழகத்தின் கண்ணதாசன் விருது அடியேனுக்கும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ள செய்தியை முன்பே உங்களிடம் பகிர்ந்திருந்தேன். விழா வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவையில் மாலை ஆறேகால் மணிக்கு நடைபெறும். அழைப்பிதழை இங்கே இணைத்திருக்கிறேன். அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறேன். விழா நடக்கும் இடம்: சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை

தமிழ்நாடு வெட்கித் தலைகுனிய வேண்டும்…

இந்தியாவில் வசிப்பதன் அவலம் பற்றிய என் புகார்களையும் கதறல்களையும் அலறல்களையும் அவ்வப்போது என் எழுத்தில் நீங்கள் படித்துப் படித்து சலித்திருக்கலாம்.  ஏன் இந்த ஆள் இப்படிப் புலம்புகிறார் என்று நீங்கள் அலுத்துக் கொண்டு கூட இருக்கலாம். ஜெயமோகன் இன்று மதியமே எனக்காக கோவை வந்து விடுவதாக எனக்கு மெஸேஜ் செய்திருந்தார். இன்று இரவு அவரோடு பேசலாம் என்று நினைத்திருந்தேன்.  ஜெயமோகனோடு நான் சாவகாசமாக அளவளாவியதே இல்லை. நாளை விழாவுக்கு இன்று மதியமே வந்து விடுவதாகச் சொல்லியிருந்தார்.  அதற்கு … Read more