நோபல் (1)

ஹாண்ட்கேவுக்கு நோபல் கிடைத்திருப்பது நோபல் பரிசின் அவலத்தைக் காட்டுகிறது. ஹிட்லரை ஆதரிக்கும் ஒருவருக்கு இலக்கியப் பரிசு கொடுப்பதற்குச் சமம். ஹாண்ட்கேவுக்குப் பரிசு கொடுத்திருப்பதன் மூலம் இனவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நோபல் கமிட்டி அங்கீகாரம் அளித்திருக்கிறது. மனித வரலாற்றிலேயே காண இயலாத கொடூரங்களை போஸ்னிய இஸ்லாமியருக்கு எதிராக நிகழ்த்தியவர்களை மிக வெளிப்படையாக ஆதரிக்கும் ஹாண்ட்கேவுக்கு இலக்கிய நோபல் பரிசு! இதை அடுத்து அமெரிக்க அதிபரும் முன்னாள் WWF ரவுடியுமான ட்ரம்புக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம். … Read more

இரண்டு புத்தகங்கள்

https://tinyurl.com/vetrulaga வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற இந்த நூலை பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நாவலைப் படிப்பது போலவே இருந்தது. இந்த நூல் உங்களிடம் இருந்தால் மீண்டும் வாங்கி உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கலாம். திட்ட மாட்டார்கள். தைரியமாகக் கொடுக்கலாம். பின் வரும் இணைப்பு மூலம் புத்தகத்தை வாங்க முடியும். https://tinyurl.com/vetrulaga இன்னொரு நூல் ரஜினிகாந்த்தின் சூரிய மேடு. இது “எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது” என்ற தலைப்பில் 2008-இல் வெளிவந்தது. நீண்ட காலமாக இந்நூல்கள் … Read more

பூனை உணவு

பூனைகளுக்கு நாங்கள் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உணவு அளிப்பது சில சக குடியிருப்புவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. கடுமையாக நெருக்கடி கொடுக்கிறார்கள். கார் வீணாகி விட்டது; ஸ்கூட்டர் வீணாகி விட்டது என்றெல்லாம் தொடர்ந்து புகார். எதுவும் வீணாகவில்லை; பொய்ப் பித்தலாட்டம். சரி, எடுத்து வாருங்கள், நான் என் செலவில் சரி செய்து கொடுக்கிறேன் என்று அவந்திகா சொன்னதும் வாயை மூடிக் கொண்டார்கள். பூனைகளால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதே உண்மை. அவை காலையில் சாப்பிட்டு விட்டு எங்கோ போய் … Read more

அக்கப்போர் (திருத்தியது)

மா சே துங் நான் ஐம்பது புத்தகத்துக்கு மேல் எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்னிடம் இல்லை. ஆனால் எண்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் அறுபது புத்தகங்கள் இப்போதும் கிடைக்கின்றன. எண்பதும் ஐம்பதுக்கு மேற்பட்ட எண்ணிக்கைதான் என்று அவர் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நான் எழுதியவை எதுவுமே புத்தகமாகத் தொகுக்கப்படவில்லை. அதையும் வெளியிட்டால் இன்னும் இருபது புத்தகம் வரும். ஜெயமோகன், எஸ்.ரா. எல்லாம் முன்னூறு புத்தகங்கள் எழுதியிருப்பார்கள். … Read more

சிந்தனைத் துறையில் இந்தியா…

சிந்தனைத் துறையில் இந்தியா மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம், கல்வித் துறை. எல்லோரும் பெரும் பணம் சம்பாதித்துத் தரக் கூடிய வேலைக்குத் தகுதியாக்கிக் கொள்கிறார்கள். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாணவப் பருவத்தில் கார்ப்பொரேட் குருமார்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை elite கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் – உதாரணமாக, IIT, IIM – ஜக்கியை வரவழைத்து உரையாடுகிறார்கள். ஆன்மீகம் தேவையா என்று ஒரு மாணவன் கேட்கிறான். … Read more

புத்தகங்கள் தேவை…

எனக்குப் புத்தகங்கள் தேவைப்படும் போதெல்லாம் என் வாசக நண்பர்கள்தான் வாங்கி அனுப்புகிறார்கள். அதேபோல் சில புத்தகங்கள் இப்போது தேவைப்படுகின்றன. வாங்கி அனுப்பக் கூடியவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் நலம். எழுதுங்கள்.charu.nivedita.india@gmail.com