சத்யஜித் ரே & ரித்விக் கடக்

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் என்ற என்னுடைய நூலை பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  படுபயங்கரமான, அலுப்பான வேலையாக இருக்கிறது.  ஆனால் பல பக்கங்களில் நான் கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்க்கிறேன்.  இந்த நூல் முதல் முதலில் வெளிவந்த ஆண்டு என்ன என்று தெரியவில்லை.  கட்டுரைகளில் எழுதப்பட்ட ஆண்டு போட்டிருக்கிறது.  2007. இந்த நூல் நல்ல சினிமாவைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது; இதன் மூலம்தான் சினிமாவை அறிந்தேன் என்றெல்லாம் பல உதவி இயக்குனர்கள் என்னிடம் சொன்னதுண்டு.  ஆனால் … Read more

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்

மேற்கண்ட நூல் இன்னும் சுமார் 15 தினங்களில் அல்லது அதிக பட்சம் ஒரு மாதத்திற்குள் உங்கள் கைகளில் கிடைக்கும். இப்போது பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். Ulrike Ottinger என்று ஒரு ஜெர்மானிய இயக்குனர் இருக்கிறார். இவரைப் பற்றி சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை. இந்த நூல் என் சினிமா பற்றிய எழுத்துக்களில் மிக மிக முக்கியமானது. இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமானால் ஒட்டிஞ்ஜரின் படங்களைப் … Read more

பணிந்தாயே!

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஒரே சமயத்தில் 25 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாக நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா, அப்படியான காலகட்டம் இப்போது எனக்கு. அத்தனை வேலைகள். அத்தனை வேலைகளுக்கு நடுவே நண்பர் கமல் வேறு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார். கடுப்பாக இருக்கிறது. ஆனால் கமல் கொடுத்த வேலையை மறுக்க முடியுமா? கமல் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு என்றால் நீங்கள் யாருமே நம்ப மாட்டீர்கள். தெரியும். அவருடைய மகாநதி, குணா, சதிலீலாவதி, உத்தம வில்லன் … Read more

லெபனான் – 2

லெபனான் என்ற தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்தால்தான் இது உங்களுக்குப் புரியும். அந்தக் கட்டுரை வந்ததுமே அது பற்றி சீனி பேசினார். அதில் வரும் இரண்டு நண்பர்களுக்கும் பெயர் வைத்துக் கொள்வோம். ஒருத்தர் பெயர் கோபால். இன்னொருத்தர் பெயர் சுப்ரா. இதில் கோபால் இந்தச் சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. லெபனான் கதையை என்னிடம் கேட்டவர் சுப்ரா. அவர்தான் வேறொரு மைலாப்பூர்வாசி மூலம் 35 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனவர். அறிமுகம்தான். பெயர் தெரியும். தொலைக்காட்சிப் … Read more

சரியான தமிழ்

சரியான தமிழ் பற்றிய அல்லது பிழை திருத்தம் பற்றிய குறிப்புகள்: நேற்று ஒரு கதையில் சுண்ணி என்ற வார்த்தையைப் படித்தேன். இப்படி எழுதும் முன் ரெண்டு சுழியா மூணு சுழியா என்று கவனிக்க வேண்டும். அவ்வளவுதான் விஷயம். நாமே கலகமாக மாற்றுவது வேறு. ஆனால் தவறாக எழுதிவிடக் கூடாது. சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார், நீங்கள் ஸாஃப்ட் காப்பியிலேயே பிழை திருத்தம் செய்து விடுங்கள். பிழைகளை மார்ஜினிலோ அல்லது ஒரு நோட்டிலோ குறித்து விடுங்கள் என்று. மற்ற … Read more

அராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்

சூம்பி என்ற இந்தக் கதையைப் போன்று – இந்த நூற்றாண்டின் இரண்டு மிகப் பெரிய நெருக்கடிகளை இவ்வளவு intenseஆகத் தரும் கதையை என் வாசிப்பு அனுபவத்தில் படித்ததில்லை.  அபத்தமும் மனப்பிறழ்வும்தான் அந்த நெருக்கடிகள்.  இந்த இரண்டையும் நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.  நமக்குத் தெரிந்த வழிகளில் அதை நாம் எதிர்கொள்ளவோ கடந்து செல்லவோ முற்படுகிறோம்.        இந்தச் சிறுகதை முதல் வாசிப்பில் சிலருக்கு சரியாகப் புரியாமல் போகலாம்.  என்னய்யா இது, நாலஞ்சு தடிமாடுங்க தண்ணியப் போட்டுட்டு உளறியதை … Read more