கிண்டில்

சில தினங்களுக்கு முன் செல்வேந்திரனின் பதிவு ஒன்றை இங்கே பகிர்ந்திருந்தேன். அவருடைய மூன்று புத்தகங்கள் ஒருசில மாதங்களிலேயே அமேஸான் கிண்டிலில் ஆயிரம் பிரதிகளைத் தாண்டி விற்றதை எழுதியிருந்தார். அமேஸான் கிண்டிலில் ஒரு புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு என் நண்பர் நிர்மலின் கீழ்வரும் பதிவே சாட்சி. ஆறு மாதங்களில் அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் கிண்டில் மூலம் வந்துள்ளது. அதுவும் அவ்வளவாகப் பிரபலம் ஆகாத புத்தகம். கிண்டிலில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. பின்வருவது நிர்மல்: இன்றுதான் கணக்கு பார்த்தேன். … Read more

பூச்சி 66

பாதாள் லோக் என்று ஒரு சீரீஸ் வருகிறது.  அமேஸான் ப்ரைம்.  இதைப் பார்க்கச் சொல்லி பல நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.  பார்க்கவில்லை.  அப்போது தருண் தேஜ்பால் ஒரு லிங்க் அனுப்பியிருந்தார்.  பார்த்தால் தருண் எழுதிய The Story of My Assassins என்ற நாவலை அப்படியே திருடி, தருண் தேஜ்பால் பெயரையே போடாமல் பாதாள் லோக் என்ற தொடரை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகை கட்டுரை சொன்னது.  அதைத்தான் தருண் எனக்கு அனுப்பியிருந்தார்.  அப்புறம் அது பற்றி … Read more

பூச்சி 65

ஊரடங்கு, தனிமைப்படுத்தல் ஆகிய காரணங்களால் என்னுடைய இரண்டு நண்பர்கள் தங்கள் இளம்பிராயத்து நினைவுகளை அப்படியே நாஸ்டால்ஜியாவாக எழுத ஆரம்பித்தனர்.  இருவருமே நாவலெல்லாம் எழுதுவார்கள் என்று அவர்களே நம்பியதில்லை.  கொரோனாவினால் உலகமே துயரத்தில் இருக்கிறது, அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும் ஒருசில நன்மைகளும் விளைந்திருக்கிறதுதானே?  கங்கை நதி சுத்தமாகி விட்டது.  எடுத்ததற்கெல்லாம் மருத்துவர்களிடம் ஓடிக் கொண்டிருந்த ஜனம் இப்போது அடங்கி இருக்கிறது.  பச்சிலை, மூலிகை என்று பாரம்பரிய மருத்துவத்திடம் நம்பிக்கை வந்திருக்கிறது.  வீட்டில் இருந்ததே இல்லை என்று இருந்தவர்களெல்லாம் … Read more