அமேஸிங் அனுபவங்கள் – செல்வேந்திரன்

எப்போதுமே எனக்குப் பிடித்தவைகளுக்கு நான் லைக் போடுவதில்லை. அவற்றை என் பக்கத்தில் ஷேர் செய்து விடுவேன். ஆனால் செல்வேந்திரனின் இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. புத்தக விற்பனை, புத்தகம் வாசகரைச் சென்றடைதல் என்ற செயல்பாட்டில் சில புரட்சிகர மாற்றங்கள் நடந்திருப்பதை ஆதாரபூர்வமாகச் சொல்கிறார் செல்வேந்திரன். கவனமாகப் படியுங்கள். இனி செல்வேந்திரன்: அமேஸிங் அனுபவங்கள் என் நெடுநாள் விருப்பமெல்லாம் நாவல் எழுதுவது. அதை எனக்குப் பிடித்தமாதிரி எழுதுவது. அதற்குரிய தன்னம்பிக்கை இன்றும் வந்துவிடவில்லை. தமிழில் டைப்படிக்கத் தெரியும் ஒரே … Read more

பூச்சி 62

காயத்ரி ஆசைப்பட்டதும் அவள் வீட்டுக்குக் கடவுள் அனுப்பி வைத்த பூனை பற்றிய ஒரு முக்கியமான விஷயம், அது ஒரு காலிகோ பூனை.  காலிகோ பூனைகள் அதிர்ஷ்டமானவை என்பது ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் நம்பிக்கை. காலிகோ பூனைகள் மஞ்சள், கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் இருக்கும்.  அநேகமாக காலிகோ பூனைகள் பெண் பூனைகளாகவே இருக்கும்.  எங்கள் வீட்டு ஸிஸ்ஸி அதன் முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகளைப் போட்டு – அப்போது அது எங்கள் … Read more

Zoom meeting

வரும் 31-ஆம் தேதி (31.5.2020) இந்திய நேரம் காலை ஆறு மணி முதல் எட்டரை வரை வாசகர்களை Zoom meeting-இல் சந்திக்க இருக்கிறேன்.  இதுவரை மாயா இலக்கிய வட்டம் (சிங்கப்பூர்) சார்பாக நடந்த சந்திப்புகள் இந்திய நேரம் மாலை மூன்று மணிக்கு நடந்ததால் அதில் அமெரிக்க வாசகர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.  அங்கே அவர்களுக்கு அதிகாலையாக இருக்கும்.  அதை உத்தேசித்து அவர்களுக்காகவே இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  எட்டரைக்கு மேல் இங்கே cat factory ஆரம்பமாகி விடும்.  பாத்திரம் … Read more