கேள்விகள்

செல்லப்பா பற்றிய உரைக்குப் பிறகான விவாதத்தில் கேட்கப்படவிருக்கும் கேள்விகளை அனுப்பியவர்கள் கோபிநாத், வளன், நேஹால், சின்னய்யா, அர்ஜுன் மோகன். இவர்கள் தவிர வேறு யாரேனும் கேள்விகள் அனுப்பினீர்களா? அனுப்பியிருந்தால் மீண்டும் அனுப்பி வைக்கவும். அல்லது, சந்திப்பில் கேட்கலாம். சந்திப்பில் ஒருவேளை நேரம் இல்லாமல் போகலாம். எனவே அனுப்பி விடுவது உசிதம். கேள்விகளைத் தொகுத்து டெஸ்க்டாப்பிலும் மொபைல்போனிலும் வைத்துக் கொண்டேன். மின் தடை இருந்தால் மொபைல் மூலம் ஸூமில் பேசலாம். ஆனால் காலை நேரத்தில் அப்படி ஆக சாத்தியம் … Read more

சி.சு. செல்லப்பா

இந்திய நேரத்துக்கு நாளை காலை இந்நேரம் சி.சு. செல்லப்பா இலக்கிய உரை நிகழ்ந்து முடிந்திருக்கும். உண்மையில் இது போன்ற ஒரு தலைப்பில் நான்கு ஐந்து மணி நேரம் கூட உரையாற்ற முடியும் என்பது சுதந்திர தாகம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது தோன்றியது. டிசம்பர் 31 மாதிரி ஒரு இரவில் முழு இரவும் கூட அப்படி உரையாடலாம். ஸூம் மாதிரி ஒரு ஏற்பாட்டின் மூலம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக புத்தாண்டு இரவுகளில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி … Read more