பூச்சி 45

இன்றைக்கு சீக்கிரமே தூங்கப் போய் விடலாம் என்று நினைத்தேன்.  அந்த நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் பக்கத்துத் தெரு அய்யங்கார்.  இந்த உலகத்திலேயே துரதிர்ஷ்டமான விஷயம் எது என்று நினைக்கிறீர்கள்?  இர்ஃபான் கான், ரிஷி கபூர் மரணங்களைப் பார்த்த போது இந்தக் கொரோனா காலத்தில் இறப்பதுதான் என்று நினைத்தேன்.  கெட்டதிலும் கொஞ்சம் நல்லது என்னவென்றால், நல்ல காலம் அவர்கள் கொரோனாவினால் போகவில்லை.  அப்படியிருந்திருந்தால் முகத்தைக் கூடக் காண்பித்திருக்க மாட்டார்கள்.  என்ன இருந்தாலும் இளவயது மரணம் கொடுமையானதுதான்.  அதை … Read more

குறுநாவல்கள் குறித்த ஓர் உரையாடல்

வரும் ஞாயிறு மாலை இந்திய நேரம் 3.30 மணி சிங்கப்பூர் நேரம் மாலை 6 மணிக்கு குறுநாவல்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆர்வம் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். சில ஆலோசனைகள்: நான் ஒரு குறுநாவல் படித்தேன் சாரு என்று ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அந்தக் குறுநாவலை எனக்கு விளக்கக் கூடாது. அது ஒன்றுதான் நிபந்தனை. மற்றபடி அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன்.

பூச்சி 44

காலையில் எட்டரை மணிக்கு மாடியிலிருந்து கீழே வந்தேன்.  ராகவன் மூன்று நாட்களாக என்னோடு பேசுவதற்கு முயற்சி செய்கிறார்.  என்னால் போனை எடுக்கவே முடியவில்லை.  ஏன் என்று இந்தப் பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும்.  காலையில் வாக்கிங் சமயத்தில் என்னை ஃபோனில் பிடிக்க முடியாது.  மாலையில் செய்வார்.  அப்போதுதான் நான் அவசர அவசரமாக டைப் பண்ணிக் கொண்டிருப்பேன்.  எடுக்க இயலாது.  ஏனென்றால், வேண்டாம், இதைப் படித்து முடிப்பதற்குள் உங்களுக்குப் புரிந்து விடும்.  ராமசேஷனும் மூன்று நாட்களாக என்னோடு பேச … Read more