பூச்சி 47

புத்திசாலி அய்யங்கார்களைப் பற்றிச் சொல்லும் போதே வேறொருவர் பற்றியும் குறிப்பிட்டேன்.  வேண்டாம்.  கனிந்த பிறகு யாரையும் மக்கு என்று சொல்ல மனசு வர மாட்டேன் என்கிறது.  இன்று காயத்ரியும் நீங்கள் கனிந்து விட்டீர்கள் என்றாள்.  அப்படியானால் அது உண்மைதான் போல.  இனிமேலும் ஸர்ப்பகந்தா மூலிகையின் மாயம்தான் அது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.  ஆனால் ஸர்ப்பகந்தாவினாலும் இருக்கலாம்.  ஸ்கீஸோஃப்ரீனியாவுக்கே மருந்தாயிற்றே?  இருந்தாலும் இன்னொரு காரணத்தையும் மனம் உசாவுகிறது.  ராம்ஜிதான் அது.  Zelig என்ற வூடி ஆலனின் படம் … Read more

மாயா இலக்கிய வட்டம் : உரையாடல்

நேற்றைய Zoom சந்திப்பின் காரணமாக பூச்சியின் பக்கம் வர முடியவில்லை.  நேற்றுதான் பல தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.  மொத்தம் இரண்டு மணி நேரம் நடந்தது பேச்சும் உரையாடலும்.  அந்த இரண்டு மணி நேரமும் போனை கையிலேயேதான் பிடித்துக் கொண்டிருந்தேன்.  அது அவசியமில்லை என்று காயத்ரி சொன்னாள்.  ஆமாம்.  போனை ஒரு பக்கம் வைத்துக் கூட இருக்கலாம்.   அது பாட்டுக்கு சாய்ந்தபடியோ நின்றபடியோ நின்று கொண்டிருக்கும்.  அது ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று என்று தெரியவில்லை.  இன்னொரு … Read more