ஒரு நேர்காணல்

தினகரன் தீபாவளி மலர், 2016 பேட்டி எடுத்தவர்: நா. கதிர்வேலன் “சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள். ஆனால், இந்த ஜித்தன் போக்கை எவராலும் கணிக்க முடியாது. காலை வேளையில் சாரு நிவேதிதாவிடம் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்,’ என சுலபமாக நேரம் ஒதுக்குகிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. சில முன்மாதிரிகளை உண்டாக்கி முதல் அடி எடுத்து வைத்தவர். தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளி. உலக இலக்கியங்களை அறிமுகப் படுத்தியவர். இப்படி … Read more

திரைக்கதை எழுதுவது எப்படி?

கருந்தேள் ராஜேஷுக்கு அறிமுகம் தேவையில்லை.  தினகரன் இதழில் திரைக்கதை பற்றி ஒரு நீண்ட தொடர் எழுதினார். அது புத்தகமாகக் கிடைக்கிறது.   பிறகு தி இந்துவில் உலக சினிமா பற்றிப் பிரமாதமான ஒரு தொடர் எழுதினார்.  அது வரும் புத்தக விழாவில் வெளியாகும்.  இதற்கிடையில் இண்டியா க்லிட்ஸ் வெப்சைட் சார்பாக, திரைக்கதை எழுதும் முறையைப் பற்றி சில வீடியோக்கள் வர இருக்கின்றன. ராஜேஷ் பேசுகிறார்.இதுதான் முதலாவது வீடியோ.. இந்த வீடியோவை நீங்கள் நண்பர்களிடையே பகிர்ந்து கொண்டால் அது … Read more

தேகம் – நூல் விவாத நிகழ்வு – இன்று மாலை

  அன்பிற்கினிய நண்பர்களுக்கு, வடசென்னை, திருவொற்றியூர் பகுதியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நண்பர்களின் முன்முயற்சியில், ‘மாற்றுக்களம்’ என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக சமஸின் ‘கடல்’, மற்றும் சாரு நிவேதிதாவின் ‘தேகம்’ நாவலை முன்வைத்து ச. வெங்கடேஷ் மற்றும் சாரு சக்தி முறையே பேசுகிறார்கள். புத்தக வாசிப்பையும், உரையாடலையும் தொடங்குவோம். புத்தக வாசிப்பை இயக்கமாக மாற்றுவோம். புத்தக வாசிப்பே ஒரு மனிதனை, முழுமையான மனிதனாக மாற்றுகிறது. வாய்ப்புள்ள தோழர்களை கலந்துக் கொள்ளும்படி அழைக்கின்றோம். நாள்: … Read more

பிரபு காளிதாஸின் நாவல்

கடுமையான வேலை நெருக்கடிக்கு இடையில் இருந்தேன். பிரபு காளிதாஸ் தான் எழுதியிருந்த நாவலின் மென்பிரதியை அனுப்பியிருந்தார். முழுசாக பிறகு படிப்போம்; இப்போதைக்கு முதல் இரண்டு பக்கங்களைப் படிப்போம் என்று ஆரம்பித்தேன். பாதியில் நிறுத்தவே முடியவில்லை. தமிழில் இப்படி ஒரு நாவலை இதுவரை படித்ததில்லை. இந்த அளவு எழுதுவார் என்று நான் ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், சிறுகதை எழுதுவது சுலபம். நாவல் அப்படி அல்ல. சிறிய நாவல்தான். 25,000 வார்த்தைகள். ஆனால் இந்திய வாழ்க்கையை மற்ற … Read more

முராகாமியின் ‘விநோத நூலகம்’

செப்டெம்பர் 28, 2016 இலக்கிய வாசகர்கள் ஹாருகி முராகாமி (இதுவே சரியான உச்சரிப்பு) பற்றி கேள்விப்படாமல் இருக்கவே முடியாது. நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஆர்வமில்லை. கூச்சல் அந்த அளவுக்கு இருந்தது. எங்கே போனாலும் முராகாமி, முராகாமி, முராகாமி. முகச்சுளிப்பே ஏற்பட்டது. நோபல் பரிசு பெறாமலேயே நோபல் பரிசு பெற்றவர்களை விட அதிக அளவு பேசப்பட்டு விட்டார் முராகாமி. அதிக அளவு புகழ் அடைந்தவர்கள் அதிக அளவு கலா சிருஷ்டி இல்லாதவர்கள் என எனக்கு ஒரு எண்ணம். ஹே … Read more