நான் தான் காரணம்!

புதிய எக்ஸைல் நாவலை எல்லோரும் கண்டபடி திட்டுவார்கள்; அப்படித் திட்டினால் நாம் ஒரு நல்ல நாவலை எழுதி விட்டோம் என்று அகமகிழலாம் என்று எதிர்பார்த்தால் நான் சற்றும் எதிர்பாராத வேறோர் அதிரடி ரகளை நடந்து கொண்டிருக்கிறது.  நாவலின் பேப்பர் சரியில்லை; சாணித்தாள், அது இது என்று.  அடப் பாவிகளா?  இது சம்பந்தமாக ஒரு பழமொழி இருக்கிறது.  கல்பூரம் அது இது என்று வரும்.  சரி விடுங்கள்.  விஷயத்தை நேரடியாகச் சொல்லி விடுகிறேன்.  பொதுவாக நான் பதிப்பாளரின் சுதந்திரத்தில் … Read more

எப்படி இருந்த சாரு…! : அதிஷா

சாரு! ‘’நிறைய காதலும் நிறைய சிரிப்பும் மட்டும் இல்லையென்றால் பீடை பிடித்த இந்த சமூகத்தில் வாழவே முடியாது’’ என்றார்தருண் தேஜ்பால். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இந்த இரண்டும் இல்லாவிட்டால் நான் போனவாரமே தூக்கில்தொங்கியிருப்பேன். தருண் தேஜ்பால் என்பவர் யாரு தெரியுமா? தெகல்கா இதழின் எடிட்டர். ஆங்கில இலக்கிய உலகின்பிரபலமான எழுத்தாளர். பாலியல்குற்றச்சாட்டில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்திருப்பவர். அதிகார மையத்திற்கு எப்போதும்அணுக்கமில்லாதவர். அப்படிப்பட்ட ஒருவரை தன்னுடைய நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க அழைக்கிற ‘’தில்’’சாருவைத்தவிர வேறு யாருக்கும் … Read more

புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (7)

அன்புள்ள நாங்கள் (நான் மற்றும் என் அண்ணன் சிவா) மதிக்கும் சாருவிற்கு வணக்கம்… புதிய எக்ஸைல் புத்தக வெளியீட்டின் போது புதிய எக்ஸைல் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவதற்காக வந்தேன், அப்போது நீங்கள் நான் கையெழுத்து போடுவதில்லை என்று மறுத்துவிட்டு நான்Announce பண்றேன் என்று சொன்னீர்கள்… இந்த நிகழ்வை charuonline.com ல் பதிவு செய்துள்ளீர்கள், இது நான் வந்து உங்களிடம் கையெழுத்து கேட்ட நிகழ்வா அல்லது வேறு வாசகர் யாரேனும் உங்களிடம் கையெழுத்து வாங்க வந்த நிகழவா என்று தெரியவில்லை. நானாக இருக்கும் … Read more

புதிய எக்ஸைல் பதிவுகள் (6)

அன்பின் சாரு, உங்களது நேர்மையில்லாதவன் பதிவை படித்தேன். அதைப்பற்றி பேசும் முன் உங்களிடம் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். //ஒழுக்கம் மொழியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. இங்கே ஒழுக்கம் என்பது பயன்படுத்தப்படும் ஒரு சில வார்த்தைகளை பொறுத்ததா அல்லது கட்டுரையின் ஒட்டுமொத்த சாராம்சத்தை பொறுத்ததா என்கிற கேள்வி எழுகிறது. நாகரிகமான வார்த்தைகளில் எழுதப்பட்ட மிக வக்கிரமான கருத்துகளை கொண்ட ஏராளமான  கட்டுரைகள் இணையதில் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் பார்த்து கெட்டுப்போகாத இந்த … Read more

நேர்மையில்லாதவன்

சாரு, தன்னுடைய படைப்புகள் அவற்றின் தரம் சார்ந்தே பேசப்பட, விமர்சிக்கப் பட வேண்டுமென்பது பல கலைப் படைப்பாகளின் கருத்து. படைப்பாளியின் தனி வாழ்வை அல்லது சொந்த விஷயங்கள் சார்ந்த அறிவு எதுவும் படைப்புகளை நிர்ணயிக்க வேண்டியதில்லை என்பது அதன் சாரம். உதாரணமாக, நீங்கள் கொண்டாடும் சுஜாதா மற்றும் christopher nolan ஆகியோரின் கருத்து அவ்வகையே. அவ்வளவு ஏன், சமீபமாக உங்களின் உடன் பிறவா சகோதரனான ஜெமோ அவர் எழுத்தாளர் என்பது அவருடன் பணியாற்றும் பெரும்பாலோருக்குத் தெரியாது என்று … Read more