சென்னை கோடையும் ட்யூரின் குதிரையும்…

கோடை தொடங்கி விட்டது மனிதர்கள் வியர்வையில் குளிக்கிறார்கள் குளிக்கும்போதே வியர்க்கிறது எங்கும் சூடு எதிலும் சூடு காற்றும் சுடுகிறது நீரும் சுடுகிறது இரவும் சுடுகிறது நிலவும் சுடுகிறது மனிதர்களும் சூடாகவே இருக்கிறார்கள் சூடாகவே பேசுகிறார்கள் எங்கு பார்த்தாலும் அனல் பறக்கிறது சென்னை எப்போதுமே இப்படித்தானென அலுத்துக் கொள்கிறார்கள் சென்னைவாசிகள் ஐரோப்பியப் பனிப்பாலையில் சிக்கிக் கொண்ட குதிரை ஒன்று தன் பலத்தையெல்லாம் திரட்டி இழுத்துச் செல்கிறது ஒரு வண்டியை

ஞானம்

வனம் வானம் நட்சத்திரம் மேகம் அண்ட சராசரம் கடல் காற்று குன்று பாறை மலை விருட்சம் அருவி நதி மிருகம் பிராணி புழு பூச்சி பூக்கள் பறவை மீன் மழை மண் புயல் இடி மின்னல் குழந்தை புனித நூல் சாக்கடை கோவில் சங்கீதம் சிற்பம் ஓவியம் இலக்கியம் பெண் தீர்க்கதரிசி அசுரர் தேவர் கடவுள்கள் யாரும் எதுவும் யாருக்கும் எதற்கும் ஒருபோதும் கற்பிப்பதில்லை தேடுபவன் கண்டடைகிறான்

அந்தத் தேன் அத்தனை நிஜம்

கருவிலேயே கலைத்துவிட்டிருக்கலாம் எனக் கெக்கலித்தது குரல் ஏறிட்டுப் பார்த்தேன் குடி பெருங்குற்றம் குடிப்பவர்களை நான் வெறுக்கிறேன் என்றது மீண்டும் அந்தக் குரல். பெண்களோடு பேசாதே பெண்களோடு பழகாதே பெண்களோடு உறவாடாதே என்றது இன்னொரு குரல் நீர்ச்சலனம் பேரலையாகி இரைச்சல் மிகுந்தது பீதியில் நான் ஓலமிட்டேன் ஊளையிடும் நாய்களை அடித்துக் கொல்லுங்கள் என்றது மற்றுமொரு குரல் என் தோளிலொரு தேன் சிட்டு அமர்ந்தாற் போலிருந்தது அன்றைய தேடலின் தேனோரு துளியைப் போனால் போகிறதென்று என் உதட்டு நுனியில் தீற்றிவிட்டுச் … Read more

வேறென்ன சொல்லட்டும், சொல்லுங்கள்? – சாரு நிவேதிதா & ஆத்மார்த்தி

எல்லாமே நாளுக்கு நாள் கூடுகின்றனஎன்றேன்.என்னையறியாமல் அப்படிச் சொல்லிவிட்டேன்.சொன்னேன் என்பதைவிட அந்தச் சொற்களை சப்தமாக நினைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.அதெப்படியோ அவளுக்குக் கேட்டுவிட்டிருக்கிறதுஎன்ன சொன்னாய் திரும்பச் சொல் என்கிறாள் இப்படி ஆரம்பித்த எத்தனையோ முத்தத்தில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி ஆரம்பித்த எத்தனையோ மூர்க்கத்தில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி ஆரம்பித்த எத்தனையோ முற்றிருளில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி முடிந்த எத்தனையோ முத்தத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது தயை தயாளம் கருணை அருள் சகிப்புத்தன்மை எல்லாமும்தான்நாளுக்கு நாள் கூடுகின்றன என்றேன்பிறகு என்றாள்தேடல் தொடர்தல் அணைத்தல் அடைதல் பற்றுதல் … Read more

முதல் நூறு 18: முகமலர்ச்சிக்குப் பயன்படுத்தும் க்ரீம்?

18. உங்கள் முகமலர்ச்சிக்குப் பயன்படுத்தும் க்ரீம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள்.  சொல்ல முடியுமா? நிர்மல், கத்தார். பதில்: முகமலர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றற்றிருத்தல் என்ற பசை.  முகப் பளபளப்புக்குப் பயன்படுத்தும் பசையை வெளியே சொல்லக் கூடாது.  உங்களுக்கு மட்டும் வாட்ஸப் பண்ணுகிறேன்.  பொதுவாக இதையெல்லாம் நாமே கண்டு பிடித்து விடலாம்.  புத்தக விழா நடந்து கொண்டிருந்த போது இயக்குனர் வஸந்தைப் பார்த்தது பற்றி எழுதியிருந்தேன் இல்லையா?  அவர் போட்டிருந்த வாசனைத் திரவியத்தின் பெயரைச் சொல்லி “அதுதானே?” என்றேன்.  … Read more