தொல்காப்பியர் பூங்கா என்ற வனத்தில்…
இன்று காலை என் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு வனத்தில் (தொல்காப்பியர் பூங்கா என்று பெயர்) நடைப் பயிற்சி சென்ற போது ராகவன் எடுத்த நிழல்படம்
இன்று காலை என் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு வனத்தில் (தொல்காப்பியர் பூங்கா என்று பெயர்) நடைப் பயிற்சி சென்ற போது ராகவன் எடுத்த நிழல்படம்
கடந்த இரண்டு தசாப்தங்களாக சினிமா பாடல் ரசிகர்களிடையே ஒரு புகார் உண்டு. பழைய பாடல்களைப் போல் இப்போதைய பாடல்களில் பாடல் வரிகளையே கேட்க முடிவதில்லை. ஒரே இரைச்சல். வாத்தியக் கருவிகளின் ஓசையில் பாடல் வரிகளே புரிவதில்லை. எல்லாம் ஒரே ஊளை சத்தம். பாடலாசிரியர்களும் சப்தத்துக்கு ஏற்ப வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொடுக்கிறார்கள். நினைக்கத் தெரிந்த மனமே மாதிரி ஒரு பாடல் இப்போது வருகிறதா? இந்தக் குற்றச்சாட்டு எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறாற்போல் ஒரு பாடலைக் கேட்டேன். திரும்பத் திரும்ப … Read more
இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் இருக்கிறது என்ற வாக்கியம் ஸலாம் அலைக் நாவலில் பல இடங்களில் வருகிறது. அந்த ஒரே ஒரு கதை என்ன? நம்பிக்கைகளுக்காகவும், கொள்கை-கோட்பாடு-சித்தாந்தம்-தத்துவம் போன்றவற்றுக்காகவும் மனிதரை மனிதர் கொலை செய்கிறார்கள். அதுதான் அந்த ஒரே ஒரு கதை. அந்தக் கதைதான் இலங்கையில் நடந்தது. இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கை பற்றிய தன்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஜெபானந்தன் எதிரானவனாக இருப்பதால் மட்டுமே தான் உயிருக்குயிராய் காதலித்த உமையாள் அவனைப் பிரிகிறாள். (”தீராதது போலத் … Read more
பணம் சேர்த்து வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. நம்முடைய தேவைக்காக மற்றவரிடம் பணம் கேட்பது கௌரவக் குறைச்சல்தான். “அப்புறம் நீ ஏன் பணம் கேட்கிறாய்?” என்று என்னைக் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு தெருப்பாடகன். என் காலடியில் தட்டை வைத்து விட்டுப் பாடுகிறேன். கேட்கும் நீங்கள் என் தட்டில் காசு போடுகிறீர்கள். அல்லது, ஞானத்தை இழந்து விட்ட சமூகத்துக்கு எனக்கு அளிக்கப்பட்ட ஞானத்தை வழங்குகிறேன். அதற்கான தட்சணையைத் தருகிறீர்கள். தராவிட்டாலும் பக்ஷமில்லை. பணம் என் … Read more
ஃப்ரெஞ்ச் மொழி பேசும் நாடுகளில் எழுதப்படும் இலக்கியத்துக்கு francaphone literature என்று சொல்கிறார்கள். இதில் ஆஃப்ரிக்கப் பகுதி ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் நான் வாசிக்காத இலக்கியவாதி இல்லை. இவர்களில் எனக்கு விருப்பமானவர்கள் முஹம்மது ஷுக்ரி, அப்துல்லத்தீஃப் லாபி மற்றும் தாஹர் பென் ஜெலோன். ஷோபா சக்தி ஃப்ரான்ஸில் வசித்து வந்தாலும் அவர் எழுதுவது ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் வராது என்று நினைக்கிறேன். இலங்கையில் ஃப்ரெஞ்சு மொழியும் பேசப்பட்டால் வரும். ஆனாலும் அவர் எழுத்து இலங்கையையும் ஃப்ரான்ஸையும்தான் சுற்றிச் சுற்றி வருகிறது. … Read more
செப்டம்பர் மாதம் பத்தாம் தேதியிலிருந்து பதினைந்து தேதி வரை நான் ஒரு முக்கியமான சொந்த வேலையாக பாண்டிச்சேரி செல்கிறேன். அங்கே வழக்கம் போல் ஆரோவில் குடிலில் தங்குவேன். என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். பகலில் என்னோடு பேசிக் கொண்டிருக்கலாம். இரவு தங்குவதற்கு நீங்களேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். என் குடிலுக்கு அருகிலேயே பல நல்ல தங்குமிடங்கள் உள்ளன. நான் தங்கியிருக்கும் குடில் ஒரு வனத்தில் இருக்கிறது என்பது அங்கே முன்பு வந்தவர்களுக்குத் … Read more