த அவ்ட்ஸைடர்… (1)

சில தினங்களுக்கு முன்னால் த அவ்ட்ஸைடர் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்புக்காக பார்க் ஷெரட்டன் வரச் சொன்னார் சீனி.  பார்க் ஷெரட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பார்தான் ஒரு காலத்தில் என் வீடாக இருந்தது.  எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு என்றெல்லாம் ராஸ லீலாவை வைத்துக் கணக்குப் போட்டு ஸ்ரீராம்தான் சொல்ல வேண்டும்.  ஆனால் இருபது ஆண்டு காலம் இருக்கும்.  எப்போது அங்கே போவதை நிறுத்தினோம் என்று ஞாபகம் இருக்கிறது.  ஞாபகம் என்ன ஞாபகம்?  அந்த சம்பவத்தை இந்தியர் யாரும் … Read more

சைவம் அசைவம்…

சைவ உணவுக்காரர்களோடு சேர்ந்து உணவகத்துக்குச் செல்வது ஒத்து வராது போல் இருக்கிறது.  கடந்த இரண்டு வாரமாக மிக மோசமான அனுபவங்கள்.  சென்ற வாரம் ஒரு நண்பர் என்னை மதிய உணவுக்கு அழைத்தார்.  அவந்திகா இல்லாமல் வீட்டில் தனியாகக் கிடக்கிறேன் என்று எழுதியிருந்ததைப் பார்த்து அழைத்தார் போல.  பல நூற்றாண்டுகளாக சைவ உணவுப் பழக்கம் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இவர் மட்டும் அசைவமும் சாப்பிடுவார்.  நான் அவரை அலுவலகத்தில் சந்தித்த போது அவர் அவராகவே இல்லை.  அந்த … Read more

மூன்று கோமிய பாட்டில்களை அப்புறப்படுத்த முயன்றது பற்றிய ஒரு நிகழ்காலக் குறுங்கதை

ஆஹா, சரித்திரத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்து விட்டேன்.  இல்லாவிட்டால் என்னை கல்கி, சாண்டில்யனோடு சேர்த்து விடுவார்கள் போலிருக்கிறது.  சரி, கதையைப் பார்ப்போம். இந்தூரிலிருந்து வருகிறது அந்தக் கோமிய பாட்டில்கள்.  உடைந்து விடாமல் பக்காவாகத்தான் பார்சல் பண்ணி அனுப்புகிறார்கள்.  என்னுடைய ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையையும் சீராக வைத்திருப்பதற்காக இந்தக் கோமியம்.  ஒரு மிருகத்தின் கழிவு எப்படி மருந்தாக முடியும் என்று கேட்டான் வினித்.  அ.மார்க்ஸின் நண்பன் இல்லையா, அப்படிக் கேட்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.  ”பசு மட்டும் அல்ல, ஆயுர்வேதத்தில் இப்படி … Read more

பெயர் தேவை

என் ஐசிஐசிஐ வங்கிக் கணக்குக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பியவர்கள் ஐந்து பேரின் பெயர் தேவை. புத்தகத்தில் வெளியிட வேண்டும். இன்று அதே ஐசிஐசிஐ கணக்குக்கு ஒரு பெரும் தொகையை அனுப்பியிருக்கும் நண்பரின் பெயரும் தேவை. பெயர் வேண்டாம் என்றால் அதையும் மதிக்கிறேன்.

ஆட்டோஃபிக்‌ஷனிலிருந்து பயோஃபிக்‌ஷனுக்கு…

Dear Charu, Hope you are doing well. ‘காலமும் வெளியும்’ படித்தேன். உங்களிடம் இதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பு அமைந்துவிட்டது. தேகம், ஸீரோ டிகிரி, ராஸலீலா போன்ற நாவல்களிலிருந்து, நான்தான் ஒளரங்ஸேப், தியாகராஜா, அசோகா போன்ற நாவல்களுக்கு நீங்கள் வரும்போது, அங்கு ஒரு paradigm shift நடக்கிறது. இந்த shift-ஐ themes மூலமாக அணுகுவதற்குப் பதிலாக genre மூலமாக அணுகுவது, உங்கள் எழுத்தை உள்வாங்கிக் கொள்ள மேலும் உதவும் என்று நம்புகிறேன்.அந்த வகையில், நீங்கள் … Read more

காலமும் வெளியும்…

நான்தான் ஔரங்ஸேப், தியாகராஜா, 1857, அசோகா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சாரு ஒரேயடியாக சரித்திரத்தின் பக்கம் போய் விட்டார்.  நிகழ்கால வாழ்வை எழுதிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது என்ன ஆனது?  ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து, பின்நவீனத்துவம், ஆட்டோஃபிக்‌ஷன் எல்லாம் எக்ஸைலோடு முடிந்து விட்டதா? இதற்கெல்லாம் காரணம், அவர் இப்போது பயணமே செல்வதில்லை.  மனிதர்களை சந்திப்பதே இல்லை.  கிட்டத்தட்ட கமல்ஹாஸன் மாதிரி எதார்த்த வாழ்விலிருந்து விலகி எங்கோ போய் விட்டார்.  கமலுக்கு சந்தான பாரதி சொல்லும் விஷயங்கள்தான் எதார்த்தம், அதேபோல் சாருவுக்கு … Read more