என் மீது வீசப்பட்ட அழுகல் முட்டை

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையின் குடும்பநல நீதிமன்றம்.  நீதிபதியின் உள் அறையில் அவர் முன்னே ஒரு குற்றவாளியைப் போல் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நீதிபதியும் என்னை ஒரு குற்றவாளியைப் போலவே பார்க்கிறார். உம்முடைய பெயர் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார்.  (ஆங்கிலத்தில் நீ, நீர், நீங்கள் வித்தியாசம் இல்லை என்றாலும் அவர் கேட்ட விதம் நீ என்பதற்கும் நீங்களுக்கும் நடுவில்தான் இருந்தது என்பதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடிந்தது.)  அறிவழகன் சார் என்று பவ்யமாகச் சொன்னேன். அட்ரஸ் என்று … Read more

பிறந்த நாள் கொண்டாட்டம்

நான் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் பற்றி அராத்து பின்வருமாறு எழுதியிருக்கிறார்: ”சாரு நிவேதிதா பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார். சாரு நிவேதிதா பிறந்த நாள் கொண்டாடியதே ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் கவனித்தால் பிரபலங்கள் அனைவரும் சிறு குழந்தை போல தங்கள் பிறந்த நாளை தாங்களே கொண்டாடிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்தேன். அனைவரும் அதை மிக முக்கியமாக நினைக்கிறார்கள். என் வயதில் சாரு இருந்திருந்த போது என்னைப்போலவே இப்படித்தான் நினைத்திருப்பார் என அனுமானிக்கிறேன். எனக்கு 60 … Read more

மிஷ்கினுக்கு வாழ்த்து

முந்தாநாள் மிஷ்கினிடமிருந்து ஃபோன். செப்டம்பர் இருபது மிஷ்கினுக்குப் பிறந்த நாள் என்று எனக்குத் தெரியும். வாழ்த்து சொன்னேன். பத்தொன்பது இரவு மஹாபலிபுரத்தில் கொண்டாட்டம், வந்து விடுங்கள் என்று அழைத்தார். நானும் நேற்று இரவு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேற்று மாலைதான் பாண்டிச்சேரியிலிருந்து திரும்பியிருந்ததால் உடனடியாகக் கிளம்ப முடியாத குடும்பச் சூழல். அடுத்த ஆண்டு கலந்து கொள்வேன், இறை சக்தி அனுமதித்தால். இன்று பிறந்த நாள் காணும் மிஷ்கினுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

விருது: கடிதம்

அன்புள்ள சாரு நிவேதிதா சார்,                            உங்களுக்கு விஷ்ணுபுரம் விருது  கண்டிப்பாக அளிக்கப்படும் என்று உங்களையும், ஜெயமோகன் சாரையும் படிக்கும் எளிய வாசகர் கூட கணித்து விடக் கூடியதாகவே இருந்தது. ஆனால் எந்த வருடம் என்பதைத்தான் யாராலும் யூகிக்க முடியவில்லை. விஷ்ணுபுரம் விருது தரமான எழுத்தாளர்களை முன்வைப்பது. அது உங்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். மற்றும் நீங்களும் ஜெயமோகன் சாரும் … Read more

குகை வாழ்க்கை

அன்புள்ள சாருவுக்கு, இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இப்போதும்கூட எழுத வேண்டுமென்று தோன்றியதற்குக் காரணம் உண்டு. பதினைந்து வருடங்களாக நான் உங்கள் வாசகி. ஆரம்பித்தில் சுஜாதா என்னுடைய அலமாரியை நிறைத்தவர். பிறகு ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என வாசித்துவிட்டு ஒருசில கதைகளுடன் நிறுத்திவிட்டேன். தமிழிலக்கியத்தில் நான் கேள்விபட்ட முதல் அழகான புனைப்பெயர் உங்களுடையது. அதன் வசீகரம் அப்படி. எங்கோ எதிலோ உங்கள் பெயர் என்னை சற்று நிறுத்தியது.  உங்கள் புத்தகங்களை வாங்கி வாசித்தேன். … Read more