ஒன்றும் தெரியாத கண்ணாடி

வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்பிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்பிறகு வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைவாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மோட்டுவளை வாட்ஸப் மோட்டுவளை வாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மின்னஞ்சல் மோட்டுவாட்ஸப் மோட்டுவளைஒன்றுமில்லை ஒன்றுமின்னஞ்சல்வாட்மின்மில்லை மின்வாட்ஸப் மோட்டுவளை மோட்டுவளை ஒன்றுமில்லைஒன்றுமில்மோட்டுவளைவாட்ஸப்ஸப்ஸப்ஸப்மோட்டுவஒன்றுமில் ஏய் நிறுத்து என்றொரு கீச்சுக்குரல்“ரெண்டு மணி நேரமாக உன்சாளரக்கம்பியில் அமர்ந்திருக்கிறேன்நீ என்னை கவனிக்கவில்லை, செல்கிறேன்”என்று சொல்லிப் பறந்ததுஅந்தத் தேன்சிட்டு

விமர்சகர்களுக்கு ஒரு பதில்…

கீழே வரும் நீண்ட குறிப்பை எழுதியவரின் பெயர் தெரியவில்லை.  அதை எனக்கு அனுப்பிய நண்பர் நான் இதற்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார்.  பொதுவாக இது போன்ற மட்டித்தனமான குறிப்புகளை நான் படிப்பதுகூட இல்லை.  தமிழ் சமூகம் எத்தனை ஃபிலிஸ்டைனாக இருக்கிறது என்பதற்கு இந்தக் குறிப்பு ஒரு உதாரணம்.  மிஸ்டர் சாரு நிவேதிதா! உங்கள் பதிவைப் படித்தபின், எழுத்தாளன் என்ற பெயரில் ஒரு அகம்பாவப் பிச்சைக்காரனின் கூப்பாடுதான் கேட்கிறது. தமிழ் மக்களை “புத்தகம் படிக்காதவர்கள்” … Read more

சீரகம் முதல் செக்ஸ் வரை

ஒரு பெண்ணைக் காதலித்தேன்அவள் குலத்தில் சீரகத்துக்குத் தடைஅடிமைக்கு வேறென்ன கதி?சீரகத்தைத் துறந்த நான் பட்டஅபானவாயுவின் அவஸ்தையைஅகிலமே அறியும் அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகுவந்த பெண் முருங்கைக்காய்க்குத் தடையென்றாள்முன் தோன்றி மூத்த தமிழ்க் குடிக்கோமுருங்கைக்காய் கலாச்சார அடையாளம்ஆனாலும் அடிமைக்கு வேறு புரிதல் உண்டா?முருங்கைக்காயை விட்டேன் அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகுவந்த பெண் பாலுக்குத் தடையென்றாள்கருப்புக் காப்பிக்குத் தாவினேன்பால் கோவா, பால் பாயாசம், பால் சர்பத்சகலமும் துறந்தேன்ஆனாலும் பாலியல் எழுத்தாளன் என்றஅடையாளம் ஒட்டிக்கொண்டே வந்தது அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகுவந்த பெண் முத்தத்துக்கு மறுப்பு … Read more