நிச்சலனத்தின் நிகழ்வெளி: புதுவை இளவேனில்

இந்த அரிய பொக்கிஷம் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. ‘ தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் குறித்த அரிய புகைப்படங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் புதுவை இளவேனில் எடுத்தவை. எல்லாமே கலைப் பொக்கிஷங்கள். ஒருவரின் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அவரை இந்த உலகின் அதியற்புத மனிதராக தன் புகைப்படக் கலையின் மூலம் மாற்ற வல்ல ஒளிக்கலைஞர் புதுவை இளவேனில். இதுவரை என்னைப் புகைப்படம் எடுத்தவர்களில் ஆகச் … Read more

மேல்கூரை மின்விசிறி

யுவதிகள்நாய்களையும் பூனைகளையும்தம் காதலரையும்தொட்டுகொஞ்சி விளையாடுவதைஅடிக்கடி காண்கிறேன்மோகினியிடம் கொஞ்சம்தன்னிரக்க பாவனையுடன் சொன்னேன்என்னை இதுவரை யாரும்தொட்டு கொஞ்சி விளையாடியதில்லையென அவள்,நீதான் தொட்டவுடன் என்னைமேல்கூரை மின்விசிறியைப் பார்க்கவைத்து விடுகிறாயேஎங்கே விளையாடுவதுஎங்கே கொஞ்சுவதுபோடா இடியட்என்று சொல்லியென்கன்னத்தைக் கிள்ளினாள் சே, அரிய வாய்ப்பை இழந்து போனேன்அன்றைய தினமும் அவள்மேல்கூரை மின்விசிறியையேபார்க்க நேர்ந்தது

தேனுகந்து பாடும் உன் அமுது

அவள் ஒரு பாடல் அனுப்பினாள்கேட்டேன்.நெஞ்சில் வந்து குடிகொண்ட நிலவுபரவசம் பரவசம் என்றதுஐயோ, இது சோகப்பாட்டு என்றாள்நான் சிரித்தேன் சோகமா? எங்கே இருக்கிறது?இசையில் சோகம் உண்டா?அது ஒரு பறவையின் றெக்கை,காற்றைத் தழுவி எல்லைகளைத் தாண்டுவதுகாதல் இசையின் நிழல்எப்போதும் தொடரும்எப்போதும் மாறும் இசை பிரபஞ்சத்தின் முதல் சொல்அதற்கு முன் மௌனம் கூட இல்லைசோகமென்று அவள் அழைத்தாலும்எனக்கு அது ஒரு மெல்லிய அழைப்புஎங்கோ ஒரு நட்சத்திரத்தின் கிசுகிசுப்பு. காதலும் இசையும் சொல்வதென்னவென்றால்.சோகம் ஒரு பெயர் மட்டுமேஆனால் பரவசம் தேன்மழைஎன் உயிரை உருக்கிநின் … Read more