கவிதை

”கடந்த வாரக்கவிதைகளை அனுப்பு” “ஆ, உனக்கு எப்படித் தெரியும்?என் இதயத்தில் ரகசியக் கேமராவைத்து விட்டாயா?” “கனவுதான் என் ரகசியக் கேமராநனவில் நானொரு மூடன்கனவில் தரிசிசரி, என் கேள்விக்குப் பதில் சொல்” ”முடியாது” சொன்னவள்எனக்குத் தன்உடல் பொருள் ஆன்மாதந்தவள்ஆக,ஆக ரகசியமானது

முடியாது

இதுவரைமுடியாது என்ற வார்த்தை கேட்டதில்லைஇப்போது அடிக்கடி கேட்கிறேன் ஏன் இப்படி ப்ளூ டிக்கை மறைத்து விட்டாய்காரணமாவது சொல்

என்றும் இல்லை இறுதிக் கோப்பை

மனையாள் சொன்னாள்:”தவறாக நினைக்காதேஆயுள் முழுதும் அசைவம் தின்றாய்இப்போது உன் உடல் அதை ஏற்கவில்லை” சாகும் வரை சாப்பிடுவேன் என்றேன். மோகினிக்குட்டி சொன்னாள்:”தவறாக நினைக்காதே,காமத்தில் வாழ்ந்தாய்மூழ்கினாய்இப்போது உன் உடல் அதைத் தாங்கவில்லை,கண்கூடாய்க் கண்டேன்போதும்.” “இந்தக் கதை கேள்:முப்பத்தைந்தில் புகாவ்ஸ்கிரத்த வாந்தி எடுத்தான்,ஆசனத்தில் குருதி கொட்டியது.மருத்துவர் எச்சரித்தார்:‘இன்னொரு கோப்பை மது அருந்தினால்,அது உன் இறுதிக் கோப்பை.’ஆனால், அவன்தினம் மூன்று முதல் ஏழு போத்தல்வைன் குடித்தபடி,முப்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.அதனால்நான் சாகும் வரை காமம் தின்பேன்.”

Shattered Edge : Shree

I almost hurt Heshee this evening.She had tortured a little mouse,barely the size of a car key,and it was trembling, curling in on itself,frightened beyond comprehension. Something in me shattered.I shouted: loud, uncontrolled.Everyone around me was shocked,half of me in that moment.I was on the edge of my racing hand.I became what I despised. I … Read more