சிறை

இதயப் பரிசோதனைக்காகமருத்துவரைப் பார்த்தேன்’குளிக்கும்போது நெஞ்சுவலிக்கிறதா?’ என்றார்ஆச்சரியத்துடன் ’ஆமாம்’ என்றேன். பிறகு சித்த மருத்துவம்வலியை நிறுத்தியது என்னை மற்றவர்பைத்தியமெனச் சொல்வதுண்டுஎங்கள் வீட்டில்கண்ணுக்குத் தெரியாதஒரு கடிகாரம் இருக்கிறது நான் குளிக்கப் போகிறேன்நேரம் 7.32வெளியே வருகிறேன்நேரம் 8.02சரியாக அரை மணி நேரம்பல் துலக்குதல் இரண்டு நிமிடங்கள்சவரம் மூன்று நிமிடங்கள்குளியல் இருபத்தைந்து நிமிடங்கள்இதுதான் கணக்குநீங்கள் எப்படிக் குளிக்கிறீர்கள்?ஐந்து நிமிடத்தில்?வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு ரோபோ குளியலறைக் குழாய் சரி செய்யப்ளம்பர் வருவதாக இருந்தது’அதற்குள் குளித்து விடவா?’என்றேன்’நீ முக்கால் மணி நேரம் குளிப்பாயே?’என்றாள் மனையாள் ‘ஆ, … Read more

ப்ளூ டிக் பைத்தியம் – 2

குப்பையிலிருந்தும்சமயங்களில் பிரபஞ்சத்தின்மூலை முடுக்குகளிலிருந்தும்கவிதைக்கான கச்சாப் பொருட்களைப்பொறுக்கித் திரியும் கவியானஎனக்கு இருபது நண்பர்கள்அதில் ரெண்டு பேரைத் தவிரவேறு எவரிடமும் ப்ளூ டிக் வராதுஎழவெடுத்த கருப்பு டிக்தான் இந்தப் பைத்தியக்கார விளையாட்டைப் பற்றிநான் ஒரு நினைவும் வைத்திருக்கவில்லைஆனால் இந்தக் கும்பலில்மோகினிக்குட்டியும் வந்து சேர்ந்தபோதுஎன் மண்டை உடைந்துநானொரு வெறி பிடித்த நாய் ஆனேன் நண்பர்கள் ஒருத்தர் ஒருத்தராய்விசாரித்தேன்ஒரு பைத்தியம் சொன்னது:என் மனைவி மெஸேஜ் அனுப்பினால்ப்ளூ டிக் தெரிய வேண்டும்பதில் அனுப்பாவிட்டால்வீடு எரிமலை புரிந்து விட்டதுஅதன் பிறகு யாரிடமும் கேட்கவில்லைபானைச் சோற்றுக்கு ஒரு … Read more

ப்ளூ டிக் பைத்தியம்

அவன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும்பிரபலமான எழுத்தாளன்என் நண்பன்வாட்ஸப்பில் அவன் ப்ளூ டிக்கைமறைத்து வைத்திருக்கிறான்எப்போதும் ப்ளாக் டிக்தான்கண்ணுக்குத் தெரிகிறது ஶ்ரீராம்என் வலது கரம்மருத்துவன்அவனும் அப்படியேப்ளூ டிக்கைப் பார்த்ததேயில்லை மோகினிக்குட்டியிடம்எப்போதும் ப்ளூ டிக்தான்ஆனால்திடீரென்றுஅவளிடமிருந்தும் மறைந்ததுப்ளூ டிக்நித்திரை போயிற்றுப்ளூ டிக் ஞாபகம் வேட்டைநாயாய்த்துரத்தியது என்னடீ?என்னடா?விளக்கினேன்சிரித்தாள்ஒரு பாறையில் அமர்ந்தபடிமலையடிவாரத்தின் மௌனத்தைப் பரிசளித்தாள் நித்திரை போனதோடுதுர்க்கனாவும் துரத்தியதுதினந்தோறும் நூறு கனா ஏய் என் மீது கொஞ்சம்இரக்கம் கொள்ப்ளூ டிக்கை மறைக்காதேஎன்றேன் எதுவும் நடக்கவில்லைஇத்தனைக்கும் அவள்சமூக ஊடகங்களில் இல்லைநண்பர்கள் இல்லைஉற்றம் சுற்றம் நெருக்கமில்லைகணவன் உண்டுநான் உண்டுஒழிந்த நேரத்தில் … Read more