புத்தக விழா – 8

இன்று (19 ஜனவரி) புத்தக விழாவுக்கு வர இயலாது. இன்றாவது பெருந்தேவியின் சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுத வேண்டும் என்பதால் இன்று புத்தக விழாவுக்குச் செல்லவில்லை. நாளையும் நாளை மறுநாளும் புத்தக விழாவுக்கு வருவேன். மாலை ஐந்து மணியிலிருந்து ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் இருப்பேன். எஃப் 19. பெருந்தேவியின் சிறுகதைத் தொகுப்பு “இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்” தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் மிக முக்கியமான ஒன்று. சமீப காலத்தில் நான் தமிழில் இத்தனை நேர்த்தியான, … Read more

புத்தக விழா – 6

நேற்று (16 ஜனவரி) புத்தக விழா களை கட்டியிருந்தது.  இனிய நண்பர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது.  போகன் சங்கர், பெருந்தேவி, கவிதா சொர்ணவல்லி மற்றும் பலர். பெருந்தேவியின் “இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்” என்ற சிறுகதைத் தொகுதியை நானும் போகன் சங்கரும் வெளியிட்டோம்.  தொகுதியை வாசித்து விட்டேன்.  சர்வதேசத் தரம் வாய்ந்த சிறுகதைகள்.  அது பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  மூன்று தினங்களாகப் போய்க்கொண்டிருக்கிறது.  ஒரே நாளில் முடித்திருப்பேன்.  புத்தக விழாவுக்குப் போய் விடுவதால் தள்ளிக்கொண்டே … Read more

புத்தக விழா – 5

இன்று (ஜனவரி 16, வெள்ளிக்கிழமை) ஐந்து மணியிலிருந்து ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19. நேற்று ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. விழா அரங்கிலிருந்து காஃபி குடிப்பதற்காக வெளியே சென்று கொண்டிருந்த போது ஒரு நண்பர் ஒரு பாக்கெட் எலந்தப்பழம் கொடுத்தார். எனக்காகத்தான் வாங்கியதாகச் சொன்னார். உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். சரவணன் என்றார். சரோ லாமா என்ற பெயரில் எழுதுகிறேன் என்றார். ஆடிப் போய் விட்டேன். ஆ, சரோ லாமா என் நெருங்கிய … Read more

புத்தக விழா – 4

நேற்று (14 ஜனவரி) புத்தக விழாவில் கூட்டமே இல்லை. தேவதேவனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததுதான் ஒரே சுவாரசியம். எலந்தப் பழம் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று சக்திவேல் எலந்தப் பழம் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதை என் அருகிலிருந்த நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முயற்சித்தபோது அந்தப் பழம் யாருக்குமே பிடிக்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கால கட்டத்துக்கு ஏற்றாற்போல் மனிதர்களின் உணவு ரசனையும் மாறி விடும் போல் தெரிகிறது. பல பழங்கள், பல உணவுப் பண்டங்கள் மனிதர்களின் வாழ்விலிருந்தே காணாமல் போய் … Read more