ருமாலி ரொட்டி – சிறுகதை (திருத்தப்பட்டது)

தில்லியில் கிடைக்கும் தந்தூரி ரொட்டி மாதிரி சென்னையில் கிடைப்பதில்லை. என்னதான் பக்கா வட இந்திய ரெஸ்ட்டாரண்டாக இருந்தாலும் கூட தந்தூரி ரொட்டியில் சொதப்பி விடுகிறார்கள்.  தந்தூரி அடுப்பு தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா?  ஒரு பெரிய பானை மாதிரி இருக்கும்.  கீழே விறகைப் போட்டு எரிப்பார்கள்.  ரொட்டியை உருட்டி ஒரு கையகல – அதை எப்படி உங்களுக்குச் சொல்வது?  அந்தக் காலத்தில் தயிர்க்காரிகள் தலையில் பிரிமணை மாதிரி ஒன்றை வைத்து அதன் மேல் தயிர்ப்பானையை வைத்துக் கொண்டு வருவார்கள் அல்லவா, … Read more

கடைசிப் பக்கங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஸ் சைரன் என்ற பத்திரிகையில் வாராவாரம் ‘சாத்தான் பாதி, கடவுள் மீதி’ என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதிக் கொண்டிருந்தேன்.  அது ‘கடைசிப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பக வெளியீடாக ஜனவரி 9-ஆம் தேதி நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும்.  விழா பாரிஸ் கார்னரில் இருக்கும் டெண்ட்டல் காலேஜ் அருகே உள்ள (ஃபோர்ட் ரயில்வே ஸ்டேஷன் எதிரில்) ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை ஆறரை மணி அளவில் நடக்கும். … Read more