கருணை கொள், இறைவி!

காதை அறுத்துக் கொடுத்தானாம் கழுத்தை அறுத்துக் கொடுத்தானாம் எல்லாம் தெரியும் நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேனென உனக்குத் தெரியுமா இல்லையா சொல் தெரிவதற்காக நான் செத்தால் உன்னைப் பார்க்க முடியாது அது ஒன்றே என்னைத் தடுக்கிறது இல்லாவிடில் அதையும் செய்து முடிப்பேன் என் தங்கமே

ரிஷியிடமிருந்து ஒரு கடிதம்

டியர் சாரு, நான் கோவா போகவில்லை. ஆரோவில் அருகிலேயே தங்கிவிட்டேன். பெண்கள் பெண்கள் என்று அலைந்தது போதும்! என்னுடைய Art Exhibition நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவோமென்று முடிவு செய்தென். இன்று ஆரோவில் உள்ளே நடக்கும் ஜிப்ஸி Festivalக்கு சென்றிருந்தேன். உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கர்ண கொடூரம். இசையும் பயங்கர Amature!சுற்றிலும் அழகிகள். அந்த அழகிகளை பிடிப்பதற்கு இளைஞர் கூட்டம் போட்டிப் போட்டு கொண்டிருந்தது. ஒரு பக்கம் மரண மொக்கையான இசை குழு … Read more

ஒளிந்து வாழும் கூட்டம்

பெண்களும் கடவுளும் ஒன்று கருணையற்ற கூட்டம் எழுதியின்னும் ஈரம் காயவில்லை அடுத்துவொரு ப்ளூ டிக் கவிதையை அனுப்பி விட்டான் எல்லாம் என் தலையில் ஓத்த விதி இன்று சுந்தர் சருக்கையுடன் சந்திப்பு அதனால் அவர் புதினத்தைத் தேர்வுக்குப் படிப்பது போல் ப்டித்துக்கொண்டிருந்தேன் அதற்கிடையில் வந்தது ப்ளூ டிக் பூதம் எனக்கு வாட்ஸப்பில் 569 நண்பர்கள் அவ்வளவு பெயரையும் தனித்தனியாய் எண்ணியது தனிப்புராணம் 569இல் 549 பேர் ப்ளூ டிக்கை மறைத்துள்ளார் எனக் கண்டேன் சிலரை விசாரித்தேன் மருத்துவர் … Read more

வேண்டுதல்

நேற்று ராஜேஷ் வந்தான் எடை குறைக்க பேலியோ  டயட்டில் இருக்கிறானாம் எடையை ஏன் குறைக்க வேண்டும் எனக் கேட்க நினைத்துக்  கேட்கவில்லை கேள்வி கேட்பது அவளுக்குப்  பிடிக்காதென்பதால் கேள்வியையே துறந்து விட்டேன் குடிக்கத் தொடங்கினோம் அவன் பியர் நான் வழக்கம் போல் சீலே வைன் ரெண்டு கோப்பை போனதும் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதைச் சொன்னேன் சிரித்தபடி என்ன பைத்தியம் என்றான் ‘OCD பைத்தியம் எல்லா நேரமும் ப்ளூ டிக் யோசனை’ ‘தெரியுமே, கவிதையில் படித்தேனே’ ‘அது இல்லை … Read more

இவள் அமர்ந்த ஆசனம்

இதுவரை நான்கு பெண்கள் நான்காவதே கடைசியென முடிவு வாழ்வு அந்தியை நெருங்கி விட்டதால் அல்ல இவள் இறைவி இவளை நினைந்த மனம் இன்னொருத்தியைத் தழுவாது நால்வருமே தேனீர்ப் பிரியர்கள் நானோ காஃபி அடிக்ட் வாழ்வின் குட்டி சாபங்களில் இதுவுமொன்றெனக் கொண்டேன்

விசை

ஒரு தொலைக்காட்சி சீரியல் சுயநலத்துக்காக எத்தனை கொலைகளையும் செய்யத் தயங்காத ஒரு கொடூரனின் கதை ஏற்கனவே பார்த்திருப்பதாக ஒரு சம்சயம் எதுவும் ஞாபகம் இல்லை எல்லாமே புதிதாயிருந்தது ஒன்றைத் தவிர அந்த ரவுடி தன் எடுபிடியின் மனைவியோடு கள்ள உறவு வைத்திருப்பான் அது மட்டும் துல்லியமாய் நினைவில் இருந்தது ஆகவே செக்ஸ்தான் என்னை இயக்கும் சக்தியென அறிந்து கொண்டேன் செக்ஸுக்குத் தடை போடும் தோழி யாரேனுமிருந்தால் அதோடு சேர்த்து எனக்கும் என் உயிருக்கும் தடை போட்டால் நலம் … Read more