குட் மார்னிங்…

சென்னையில் பெயர் சொன்னாலே தெரிந்து விடக் கூடிய ஒரு பிரபலமான தொழிலதிபர் அவர்.  எனக்கு ஃபோன் செய்தார்.  ஒரு படம் எடுக்க வேண்டும், நீங்கள்தான் வசனம் எழுத வேண்டும் என்றார்.  சரி என்றேன்.  இப்படி என்னிடம் வரும் அறுபத்தொம்போதாவது நபர் இவர்.  வேளச்சேரியில் ஒரு நண்பரின் அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று ஏற்பாடு.  இரண்டு மணிக்கு சந்திப்பு.  ஒன்றரை மணிக்கு ஃபோன் செய்து “முக்கியமான விருந்தாளி வந்து விட்டார், நான்கு மணிக்கு வரலாமா?” என்றார்.  வாருங்கள் என்றேன்.  அதுவரை … Read more

பணத்துக்கும் நமக்குமான உறவு அல்லது சில்லுண்டித்தனம் – கொடுங்கதை – அராத்து

(பின்வரும் கதை அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது. எனக்கும் இதேபோல் தினந்தோறும் நடப்பதால் இதை நான் எழுதியதாகவும் கொள்ளலாம். கன்ஸல்டிங்க் போன்ற பரதேச பாஷைகளுக்கு மட்டும் தமிழில் நீங்களாகவே போட்டுக் கொள்ளவும். கன்ஸல்டிங்க் என்பதற்கு நான் ஆலோசனை என்று எழுதியிருப்பேன். – சாரு) ஒரு ஃபேஸ்புக் நண்பர் புத்தகத் திருவிழாவில் என்னை சந்தித்து நம்பர் வாங்கிக்கொண்டார். தொழில் ரீதியாக கன்ஸல்டிங்க் வேணும் என்றார். நான்கைந்து வாட்ஸப் மெசேஜ் , இரண்டொரு கால் . ஒரு நாள் தன் உதவியாளர்கள் … Read more

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்தால் விவாகரத்து… (குறுங்கதை)

வெளியூர்களிலிருந்து சென்னை நகரத்திற்கு வந்து வாழ நேர்ந்திருக்கும் எழுத்தாளர்கள் பலர் இந்த நகரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதுவதைப் பார்க்கும் போதெல்லாம் ‘இது உச்சக்கட்ட ஸ்டாக்ஹோம் சிண்ட்ரமின் வெளிப்பாடு’ என்று தோன்றும்.  ஏனென்றால், தென்னிந்தியாவிலேயே மனிதர்கள் வாழ்வதற்குக் கொஞ்சமும் லாயக்கு இல்லாத ஊர் என்றால் அது சென்னைதான்.  ஊர் என்ன செய்யும், மனிதர்களே காரணம்.  ஆனால் இந்த ஊருக்கும் இந்த ஊரின் கச்சடாத்தனத்தில் பெரும் பங்கு இருக்கிறது.  முக்கியமாக, இந்த ஊரின் தட்பவெப்பம்.   ஆனால் … Read more

டிப்ரஷனைப் போக்க ஓர் எளிய உபாயம்

எங்கு பார்த்தாலும் டிப்ரஷன் டிப்ரஷன் என்றே புலம்புகிறர்கள் என்று சீனி எழுதியிருந்தார்.  ஆமாம், உண்மைதான்.  ஆனால் எனக்கு டிப்ரஷன் என்றால் என்ன என்று தெரியாது.  தெரிந்தவர்களைத் தெரியும்.  ஆனாலும் டிப்ரஷன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவே முடியவில்லை.  எனக்கும் டிப்ரஷன் வந்திருக்கலாம்.  ஆனால் அதுதான் டிப்ரஷன் என்று கண்டு கொள்ளும் ஆற்றல் எனக்கு இல்லாதிருந்திருக்கலாம்.  டிப்ரஷனுக்குத் தமிழ் வார்த்தையும் தெரியவில்லை.  எனக்கு உணவு விஷயமாகத்தான் டிப்ரஷன் வருவதாகத் தோன்றுகிறது.  அதாவது, அந்த மன உணர்வுதான் டிப்ரஷன் … Read more

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதம்

2007இல் இந்தியா டுடேவில் வெளிவந்த கட்டுரை தமிழர்களிடம் காணக் கிடைக்கும் ஒரு வினோதமான பழக்கம் என்னவென்றால், உலகத்திலேயே சிறந்த மொழி, சிறந்த கலாச்சாரம், சிறந்த கலை, சிறந்த இலக்கியம் – இன்னும் என்னென்ன சிறந்த விஷயங்கள் உண்டோ அத்தனை சிறந்தவைகளுக்கும் தாங்களே சொந்தக்காரர்கள் என்று நம்புவது. சமயங்களில் சில கவிஞர்களும் தமிழர்களின் இந்த நம்பிக்கைக்கு உரம் போட்டு வளர்ப்பதுண்டு. கவிஞர்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்றோ, இதே கவிஞர் சீனாவில் பிறந்திருந்தால் ‘இந்த உலகத்திலேயே இனிமையான மொழி … Read more

த அவுட்ஸைடர்… (2)

இன்று அஞ்சல் பொருள் கிடங்கு என்ற அலுவலகத்தில் படப்பிடிப்பு.  அந்த அலுவலகத்தில் நான் நான்கு ஆண்டுகள் வேலை செய்தேன்.  1993இலிருந்து 1997 வரை.  அந்த அலுவலகத்தில் நான் பணி மாற்றம் செய்யப்பட்டது ஒரு கதை. 1992இல் நான் வேலூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டேன்.  ஸ்டேனோவுக்கு ஒரு இடத்தில் நான்கு ஆண்டுகள்தான் வேலை செய்ய முடியும்.  நான் போன ஜென்மத்தில் கொடும்பாவங்களைச் செய்திருக்கிறேன்.  ஏனென்றால், ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தா என்பவர் அதிர்ஷ்டசாலி.  குமாஸ்தாவை விட ஸ்டெனோ அம்பது ரூபாய் … Read more