விருதும் வாழ்த்தும்…

டியர் சாரு, விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு இந்த ஆண்டு அளிக்கப்படுவது பற்றி என் மகிழ்ச்சியை வாட்ஸப்பில் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் உங்கள் ப்ளாகில் இதற்காக உங்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவிக்காத சில நண்பர்கள் பற்றி வருத்தப்பட்டு அதெல்லாம் நாடக நட்பு என்று வர்ணித்திருந்தீர்கள்.  நீங்கள் இப்போது இருக்கும் உயரத்தில் இது பற்றியெல்லாம் மனதில் எடுத்துக் கொள்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  யார் வாழ்த்து அனுப்பினால் என்ன, அனுப்பாவிட்டால் என்ன என்ற மனநிலையில்தானே நீங்கள் இப்போது இருக்க வேண்டும்?  மற்ற … Read more

பாண்டிச்சேரி சந்திப்பு: அராத்து

சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்பது ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு வட்டம் அல்ல. இன்னும் கேட்டால் , சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்ற ஒன்றே இல்லை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் , சாரு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு வேலையை எடுத்துச் செய்யலாம் , எப்போது வேண்டுமானாலும் அதை அப்படியே கைவிட்டு விட்டு சென்று விடலாம். நான் ஓரிரு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். வேறு பல வேலைகளாலும் அலுப்பாகவும் இருந்ததால் இப்போது எந்த ஒரு வேலையும் … Read more

ஒரு சனிக்கிழமை இரவு

வினித் ஒரு டீட்டோட்டலர்.  மது அருந்தியதே இல்லை.  அருந்தப் போவதாகவும் இல்லை.   ஆனால் அவரை வாரம் ஒருமுறையாவது எங்காவது ஒரு பப்பில் பார்க்கலாம்.  ஏதாவது ஒரு குளிர்பானத்தை அருந்தி விட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார்.  டான்ஸ் அவருக்குப் பிடிக்கும்.  டான்ஸ் ஆட பப்தான் ஒரே இடம் என்பதால் அங்கே போகிறார்.  குடி, பப் இரண்டின் தொடர்பும் விடுபட்டுப் போனதால் வினித் பப்புக்குப் போகலாம் என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சென்ற சனிக்கிழமை.  டென் டௌனிங்கில் ஆண்கள் மட்டும் … Read more

எழுத்தாளரும் வாசகரும்

அன்புள்ள சாரு, “நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்” என்று முந்தைய மின்னஞ்சலில் எனது விருப்பமாக எழுதியிருந்தேன். அடுத்த நாள் இன்ப அதிர்ச்சியான ஒரு செய்தியாக தங்களுக்கு “விஷ்ணுபுரம் விருது” அளிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மிக்க மகிழ்ச்சி. தங்களது ப்ளாக் மற்றும் சில நாவல்கள், சிறுகதைகளை வாசித்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது முள், ஜீரோ டிகிரி, ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி. தற்போது நான்தான் ஔரங்ஸேப் முன்பதிவும் செய்துள்ளேன். உங்களின் எழுத்துகளை வாசித்து உங்களை நெருக்கமாக உணர்வதால் உங்களுக்கு எழுத … Read more

பாண்டிச்சேரி சந்திப்பு

என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் வருகின்ற பதினேழாம் தேதி பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள காட்டு இல்லத்தில் சந்திக்கலாம். அடர்ந்த காடு. அங்கிருந்து முக்கால் கிலோமீட்டர் நடந்தால் வீதியும் கடைத்தெருவும் வந்து விடும். காட்டு இல்லத்தின் அருகிலேயே பல தங்கும் விடுதிகளும் உள்ளன. இரவு தங்குவதற்கு நீங்களேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வினித்திடம் கேட்டால் விவரம் சொல்வார். பகலில் மது அருந்தக் கூடாது. இரவில் அருந்துபவர்களும் என்னோடு உரையாடுவது சாத்தியம் இல்லை. சென்ற முறை … Read more

இலக்கியத்தின் இடம்: ஒரு கடிதம்

அன்புள்ள சாரு , அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கும் , தங்களிருவரின் வாசகராகிய எனது பணிவான வணக்கங்கள். 2005-ல் எனக்கு சாருவின் எழுத்து அறிமுகமானது. அப்போது தினமலர் இணையதளத்தில் சாருவின் இணைய முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. 2005-2008-ல் என் வாழ்வில் நடந்த துயரங்களுக்கு சாருவின் எழுத்து அருமருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இருந்தது.  அந்த சமயத்தில் வெளிப்பார்வைக்கு இலக்கிய வம்பாக சாரு ஜெயமோகனை பற்றி எழுதிய பதிவுகள் மூலமாக ஜெயமோகன் எழுத்து எனக்கு அறிமுகமானது. சாருவின் எழுத்துக்கள் (புனைவு & அ -புனைவுகள் ) … Read more