சாருவைப் புரிந்து கொள்வது எப்படி? : காயத்ரி

Warning: நீண்ட பதிவு மற்றும் சாருவைப் பிடிக்காதவர்கள் அப்படியே இதைக் கடந்து போக கேட்டுக் கொள்கிறேன். நான் படித்துப் புரிந்துகொண்ட சாருவை கூடிய மட்டும் சொல்ல விழைந்திருக்கிறேன்.* சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன். தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். சாரு தன்னுடைய கட்டுரை ஒன்றில்: “மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade), வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), … Read more

சகாக்கள்

பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முத்தம் கொடுத்துக் கொள்ளாத குறையாகக் கொஞ்சிக் கொள்வார்கள்.  ஆனால் எழுத்து என்று வரும்போது விஷத்தைக் கக்குவார்கள்.  சமீபத்தில் என் ஆவணப்படத்துக்காக ஒரு எழுத்தாளரைச் சந்தித்தேன்.  நேரில் இனிமையின் சொரூபமாகப் பேசியவர் எங்கள் சந்திப்பு பற்றி ஃபேஸ்புக்கில் எழுதும் போது விஷத்தைக் கக்கியிருந்தார்.  நான் அப்படி இல்லை.  தர்மு சிவராமு மாதிரி.  எனக்குப் பிடிக்காதவராக இருந்தால் வாய் வார்த்தையாக வணக்கம் கூட சொல்ல மாட்டேன்.  அவராகவே வலிய வந்து சொன்னாலும் … Read more

விசித்திர வீரியன் : அராத்து

2017 இல் எழுதி இருக்கிறேன். சாரு நிவேதிதா விஷ்ணுபுரம் விருதை பெறும் இந்த நேரத்தில் இதுவரை படிக்காதவர்களுக்காக பதிவிடுகிறேன். சாருஆன்லைன்.காம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கால கட்டம். ஒருநாளில் நான்கைந்து முறை ஏதேனும் கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்போம். குடி, குட்டி, மது, மாது (இரண்டுக்கும் வேறுபாடு உண்டு) என்று சாரு நிவேதிதா கலர்ஃபுல்லாக இருந்தது போன்ற இமேஜுடன் இருந்துகொண்டிருந்த கால கட்டம் அது. (இப்போது என்பதால் இப்படி நீட்டி முழக்கி பம்ம வேண்டியுள்ளது). இலக்கியமாவது … Read more

காலையில் என்ன ப்ரேக்ஃபாஸ்ட்?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை.  எக்ஸ் என் நெருங்கிய நண்பர்.  தினமும் சந்தித்துக் கொள்வோம்.  பல மணி நேரம் பேசுவோம்.  அப்போது ஒரு இலக்கியப் பத்திரிகையில் சினிமா பாடல்கள் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது.  அக்கட்டுரையை மறுத்துச் சொல்வதற்கு சில விஷயங்கள் இருந்தன.  அதை ஒரு கட்டுரையாக எழுதி பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.  பிரசுரம் ஆனது.  விவாதம் நல்ல விஷயம்தான் இல்லையா?  ஆனால் எக்ஸ் அப்படிப் பார்க்கவில்லை.  என் கட்டுரைக்கு எக்ஸ் ஒரு மறுப்பு எழுதினார்.  … Read more

வாழ்த்துக்கு நன்றி…

விஷ்ணுபுரம் விருதுக்காக நேற்று எனக்கு வாழ்த்து சொன்னவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டிருந்தேன். இன்று அது சாத்தியமில்லை போல் தெரிகிறது. ஏனென்றால், என் தொலைபேசி எண் ஒரு முந்நூறு பேருக்குத் தெரிந்திருக்கும் என்றால் அதில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் வாழ்த்து வந்து விட்டது. அந்த ஒருவர் எழுத்தாளர். அதற்கு அவருக்குக் காரணங்கள் இருக்கலாம். ஒன்றும் பிரச்சினை இல்லை. சினிமா உலகிலிருந்து இயக்குனர் வஸந்த், ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன் மூவரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். வாழ்த்து அனுப்பாதவர்களில் என் … Read more

பார்த்ததில் ரசித்தது

மீ: என்ன சாரு போயும் போயும் அந்த விஷ்ணுபுரம் விருதை வாங்குறீங்க… சாரு: சின்னதா சண்டை போட்டோன்ன என்ன விட்டுட்டு ஜெயமோகனை வச்சி புக்கு ரிலீஸ் பண்ணவன்தான நீ… கார்ல் மார்க்ஸின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து…