சாரு நிவேதிதா – வாழ்ந்து வரும் ஷோர்பா: இராயகிரி சங்கர்

நம் நீண்ட ஞானமரபில் சித்தர்களின் பங்களிப்பை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. தொலைந்து போன ஞானச் செல்வம் அம்மரபு. புதுமைப் பித்தனுக்கு வெள்ளாள பிறப்பின் மூலம் சைவப் பின்புலம் இயல்பாக சாத்தியப்பட்டாலும் சித்தர்களைப் பற்றிய புனைவுகளையும் அதிகம் எழுதியிருக்கிறார். பாரதியை சித்தர்களில் ஒருவர் என்றே மதிப்பிடலாம். ந.பிச்சமூர்த்தி, மெளனி, பிரமிள், மு.தளையசிங்கம் என்று அம்மரபு நம்மிடையே அறுபடாமல் இருந்து கொண்டுதான் உள்ளது. சமகாலத்தில் போகன்சங்கர் அத்தகைய புனைவு வெளியை படைப்பாக்கும் வாழ்வியல் அனுபவங்கள் உள்ளவர். ஜெ.நிறைய எழுதி இருக்கிறார். … Read more

விஷ்ணுபுரம் விருது 2022: இராயகிரி சங்கர்

தேய்வழக்கானது என்றாலும் சொல்லியாக வேண்டியுள்ளது. முகநூலின் மோசமான பின் விளைவுகளில் அதுவும் ஒன்று. கும்பல் மனோபாவம். என்ன ஏது என்கிற சுய அனுபவம் இல்லாமலேயே எல்லாம் அறிந்த தோரணை யில் அடித்து விடுவது. அறியாமையே அந்த துணிவைத் தருகிறது. பெரும்பான்மையோடு ஜல்லி அடிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுஜீவி பிம்பத்திற்கு ஏதும் சேதாரம் ஆகாது என்ற உறுதிப்பாடு வேறு. இன்றும் சாரு நிவேதிதாவின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன்.அவருடைய எந்த நூல் வெளிவந்தாலும் உடனே வாங்கி வாசித்துவிடுகிறேன். உண்மையில் … Read more

கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா: அராத்து

என்னைப் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளில் முக்கியமானது. அரூவில் வந்தது. https://aroo.space/2020/07/04/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/ கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா | அரூ (aroo.space)

கருப்பு நகைச்சுவையும் சுய பகடியும் கலந்த கதைகள் : ந. முருகேச பாண்டியன்

1981ஆம் ஆண்டு, கோவை மாநகரில் நடைபெற்ற ‘இலக்கு’ கருத்தரங்கில், ‘சாரு’ என்று அழைக்கப்படுகிற சாரு நிவேதிதாவை முதன்முதலாகப் பார்த்தேன். மதுரை நிஜ நாடக இயக்கம், கருத்தரங்கில் நடத்திய வீதி நாடகங்களில் நடிப்பதற்காக நானும் போயிருந்தேன். தீவிரமான இடதுசாரிப் பின்புலத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்ற அந்தக் கருத்தரங்கு அரசியல்ரீதியில் முக்கியமானது. மாறுபட்ட தோற்றத்தில் கவர்ச்சிகரமாக விளங்கிய இளைஞரான சாருவின் உடல்மொழியும், கருத்தரங்கில் தீவிரமாக எதிர்வினையாற்றிய செயலும் பல்கலைக்கழக மாணவனான எனக்குப் பிடித்திருந்தன. அன்றைய காலகட்டத்தில் கணையாழி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த … Read more