புகைப்படம் என்ற கலாச்சார அடையாளம்
இன்று மதியம் நானும் அருணாசலமும் சவேரா ஓட்டலுக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தோம். அப்போது அவர் என்னை சுமார் அறுபது புகைப்படங்கள் எடுத்தார். தொழில் ரீதியாக அல்ல. கைபேசி மூலமாக. இதில் ஒரு சமூகவியல் பிரச்சினை இருக்கிறது. திருவள்ளுவர், பரண\ர், கபிலர், இளங்கோ என்று யாரை எடுத்தாலும் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்கள் காலத்தில் புகைப்படம் இல்லை. ஆனால் சிற்பக்கலை இருந்தது. சிற்பங்களாகக் கூட அவர்கள் செதுக்கப்படவில்லை. சிற்பத்தை விடுங்கள். ஓவியம் ஆதி கலை. … Read more