விடை பெற்றுக்கொண்ட தூரத்து நண்பன் (சிறுகதை)

நான் மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது மரணச் செய்தியை கேள்விப்பட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறேன். அப்படிக் கிடைத்த முதல் மரணச் செய்தி சுஜாதா குறித்தது. நானும் மணியும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கடும் போதையில் இருந்தேன். மணி வேறோர் நண்பரிடம் ஏதோ பிஸினஸ் பேசிக்கொண்டிருந்ததால் நானும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் எதிரே போய் நின்று ஏதோ அளவளாவிக்கொண்டிருந்தோம். யாரோ சுஜாதாவின் மரணச் செய்தியை என்னிடம் தெரிவித்தார். அடுத்த க்ஷணம் அந்த மரணச் செய்தியைத் … Read more

எனது இறுதி நாளில் கலந்து கொள்ளத் தடை செய்யப் பட்டவர்கள்

என் இறுதி நாளில் கலந்து கொள்ளத் தடை செய்யப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு இல்லை அல்லவா? பாலகுமாரனை எல்லோருக்கும் ஒரு எழுத்தாளனாகத்தான் தெரியும். ஆனால் அதை மீறி அவருடைய ஒரு தன்மை எனக்கும் அவருடைய நெருங்கிய நண்பன் ஜெகனுக்கும் தெரியும். பாலா எங்களிடம் தன்னுடைய இறுதி நாளைத் தெரிவித்தார். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தன. இல்லை பாலா, இன்னும் சில ஆண்டுகள் நீங்கள் இருக்க வேண்டும் … Read more

ஐந்தாறு புதிய புத்தகங்கள்

இன்றுதான் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, கொலைவெறியில் எழுதிக்கொண்டிருந்த அனாடமி ஆஃப் டிஸொனன்ஸ் நாவலை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, ஸ்ரீராம் எடிட் பண்ணிக் கொடுத்திருந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியிருந்த சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். எல்லாமே ராஸ லீலா நாவலின் அத்தியாயங்களைப் போல் இருக்கின்றன. பொறுமையாகத் தொகுத்தால் இரண்டு புதிய நாவல்கள் கிடைத்திருக்கும். பரவாயில்லை. என் கட்டுரைத் தொகுப்புகளே சிறுகதைகள் போன்றவைதான். சிறுகதைகள் நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள். இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற கட்டுரைத் தொகுப்பை … Read more

ஆசார்ய தேவோ பவ!

குருவை தெய்வமாகக் கருது. மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.  தைத்திரீய உபநிஷதத்தில் வருகிறது.  குருவை தெய்வமாகக் கூட நினைக்க வேண்டாம்.  குருவை பைத்தியம் என்று சொல்லிக் கல்லால் அடிக்கக் கூடாது.  அடித்தால் என்ன ஆகும் என்று மஹாபாரதம் இப்படிச் சொல்கிறது:  ஸ குலஹீனஸ்ஸ்யாத் பாக்யமேவ ந ச ச்ரேயஸ் ஜஹாதி ஹி.   இதன் அர்த்தத்தை நான் சொல்லக் கூடாது.  இத்தனை எதிர்மறையாக எல்லாம் என் வாயிலிருந்தோ கரங்களிலிருந்தோ வார்த்தைகள் வராது.  இந்தக் காலத்தில் எழுத்தாளன்தான் குருவின் ஸ்தானத்தில் இருப்பவன்.  … Read more

காஃப்காவின் எழுத்தும் என் அன்றாட வாழ்வும்…

காஃப்காவின் எழுத்து எனக்குப் பிடிக்காது.  என் அன்றாட வாழ்வும் எனக்குப் பிடிக்காதது.  ஆனால் எனக்கு வேறு வழியில்லை.  இது என் மீது திணிக்கப்பட்டது.  இதிலிருந்து என்னால் விடுபட இயலாது.  எனக்குப் பிடித்தது போல் என் அன்றாட வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வசதியும் வாய்ப்பும் எனக்கு இல்லை.  மார்க்கி தெ ஸாத் தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.  அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை.  வான் காகின் வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு வான் காகுக்கு … Read more