விழா பதிவுகள் – 4

நேற்றைய விழாவில் மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு என்று எல்லோரும் சொன்னது, நம்ப முடியாது, பத்ரி சேஷாத்ரி.  நம்ப முடியாது என்ற வார்த்தைக்கு பத்ரி மன்னிக்கவும்.  அவருடைய பேச்சு எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்கு எதிரான இடத்தில் சஞ்சரிக்கும்; அவருடைய பேச்சு எப்போதும்  அறிவார்த்தமாகவே இருக்கும்.  ஆனால் நேற்றைய பேச்சு இது பத்ரியா என ஆச்சரியமடைய வைத்தது.  நான் மட்டும் இல்லை; பல நண்பர்கள் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டனர். மனுஷ்ய புத்திரனின் பேச்சு பொதுவாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அந்தரங்கமான வெளியில் சஞ்சரிப்பதாக … Read more

ஸ்விட்ஸர்லாந்து போனாலும் விடாத சாதித் திமிர்…

சாதித் திமிரும், நிலப்பிரபுத்துவ பண்ணையார் மனோபாவமும் கொண்ட, இலக்கியம்-சினிமா-இசை- ஓவியம் போன்ற எந்தத் துறை குறித்தும் அறிவோ பிரக்ஞையோ இராத, பாமர ரசனை கொண்ட சிலரால்தாம் ஈழத் தமிழர்கள் இத்தனை பெரிய இன்னல்களை அடைந்தார்கள்.  இதை நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  ஈழத் தமிழரின் துயரம் பற்றி உலகில் எந்த ஒரு பதற்றமோ செய்தியோ எழாததற்கும் இப்படிப்பட்ட சாதித் திமிர் கொண்ட பண்ணையார்கள் தான் காரணம்.  வேடிக்கை என்னவென்றால் இது போன்ற ஆட்கள் நாகரீகமடைந்த மனிதர் … Read more

விழா பதிவுகள் – 3

நேற்றைய விழா அரங்கத்துக்கு வெளியே ஐந்தரை மணிக்கே துவங்கி விட்டது.  சுமாராக 800 பேர் வந்திருந்தனர்.  நூறு பேர் விழா துவங்குவதற்கு முன்பே கிளம்பி விட்டனர்.  குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வந்திருந்த 800 பேரில் 700 பேர் கீழே உள்ள புகைப்படத்தில் காண்பதைப் போன்ற இளைஞர்கள்தான்.  என் எழுத்தை யார் வாசிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சாட்சி.  நேற்று மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் எடுத்த புகைப்படம்.  (விழா பேனரைக் காணோமே, இது செட்டப் செய்து எடுத்த … Read more

விழா பதிவுகள் – 2

முகநூலில் நிர்மல் எழுதியது: “என்னங்க விழா முடிகிற வரைக்கும் கூட்டம் அப்படியே இருக்கிறது!! ஏதும் காசு கொடுத்து அழைச்சிட்டு வந்தாங்களா?” செவியில் விழுந்த ஒரு கமெண்ட். அந்தளவுக்கு விழாவை கொண்டாடினார்கள் அனைவரும். செம சந்தோஷம். சாருவின் எழுத்தின் அரசியல் என்ன? இது பொதுவாக எல்லோரும் முன் வைக்கும் கேள்வி. அனைத்து அடுக்கிலும் வெளிப்புறமாகவும் திரை மறைவாகவும் இருக்கும் அதிகாரத்தை எழுத்தில் தகர்த்தல். அதுவே அவரின் அரசியல். சாருவின் பேச்சு இதை மையப்படுத்தியே இன்று முழுவதும் பேசினார். அதிகாரத்தை எதிர்த்து அதிகாரம் செய்யாமல் எப்படி எதிர்க்க? … Read more

விழா பதிவுகள் – 1

முகநூலில் வாசகர் வட்ட நண்பர் கணேஷ் ராம் எழுதிய பதிவு: இலக்கியம் என்றாலே தலைவன் தலைவியை பார்த்துப் பாடுவதென்றும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை என்று வினாத்தாளில் சாய்ஸில் விடக்கூடிய படிப்பாகவும் நினைத்து ‘டர்’ராகித் தெறித்து ஓடிய இளைஞர்களை குழந்தைகள் போன்று பாவித்து, அழகாக கை பிடித்து அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியவர் சாரு. போய் அவரிடம் கேட்டுப் பாருங்கள்… என் பிள்ளைகள் என்றுதான் தனது வாசகர்களைச் சொல்வார். இன்று சனிக்கிழமை கொண்டாட்டங்களுக்கு நடுவே ஒருபுறம் ‘இளையராஜா … Read more