பதிப்புப் பிரச்சினைகள்

உயிர்மையில்தான் என்னுடைய பெரும்பாலான புத்தகங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. புத்தகங்களின் உருவாக்கத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. ஃபாண்ட், டைப்செட்டிங் போன்ற வார்த்தைகள் கூட அப்போது எனக்குத் தெரியாது. பிழை திருத்தம் செய்ய பிரதி என்னிடம் வரும். திருத்திக் கொடுப்பேன். அவ்வளவுதான். அட்டைப் படத்தைக் கூட நான் பார்க்க மாட்டேன். ஏனென்றால், அவை மிக நேர்த்தியாகவும் அழகியலோடும் அமைந்திருக்கும். அடுத்து கிழக்கு. அங்கேயும் அவ்வண்ணமே நடந்தது. கிழக்கில் அட்டைப் படம் மட்டும் பிழை திருத்தத்தோடு சேர்த்துப் பார்ப்பேன். … Read more

சேகரிடம் எனக்கு ஒரு கேள்வி…

எஸ்.வி. சேகருக்கு உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.  இந்த விஷயம் பற்றி பல நண்பர்கள் சேகருக்கு ஆதரவாக முகநூலில் எழுதுவது எனக்குப் பெரும் ஆச்சரியத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.  நம் சமூகம் எந்த அளவு க்ஷீணம் அடைந்து விட்டது என்பதாலேயே கவலை.  எஸ்.வி. சேகரின் முகநூல் பதிவு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.  ஏனென்றால், பெண்களைப் பற்றி இந்துத்துவவாதிகள், மத அடிப்படைவாதிகள் போன்றவர்களின் கருத்தே அப்படிப்பட்டதுதான்.  பெண் என்றால் வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டும்.  வெளியே வந்தால் ஒழுக்கம் கெட்டவள்.  … Read more