பாலாவும் நானும்…

பாலகுமாரனுக்கும் எனக்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிக நெருங்கிய நட்பு இருந்தது.  பல முறை அவர் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  நானும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.  என் எழுத்தைப் பற்றி பிரமித்து பிரமித்துப் பேசுவார்.  நீ வா போ தான்.  நான் அவரிடம் சொல்வேன், பாலா என் 25-ஆவது வயதில் வெளியான ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் என்ற தொகுப்பில் வந்த உங்கள் கதை ஒன்றைத் தவிர உங்களுடைய வேறு ஒரு கதையோ நாவலோ நான் படித்ததில்லை … Read more

பாலகுமாரன் – அஞ்சலி

பாலா என்ற சித்த புருஷன் ஜூலை 2016 (பாலகுமாரனின் எழுபதாம் பிறந்தநாள் சிறப்பு மலர் ‘எழுத்துக்கு எழுபது’-வில் வெளியான கட்டுரை) எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம். சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதை படித்தேன். உனக்கென்ன கோவில் குளம் சாமி பூதம்  ஆயிரமாயிரம் இனிமையாய்ப் பொழுதும் போகும் வலப்பக்கம் கடல் மணலை இடப்பக்கம் … Read more