சோறே தெய்வம்!!!
வரும் 18-ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நான் வெளியில்தான் சாப்பிட்டாக வேண்டும். எனக்கு சமைக்கப் பிடிக்கும் என்றாலும் என் ஒருவனுக்காக சமைப்பது அலுப்படிக்கும் விஷயம். அவந்திகா வெளியூர் செல்கிறாள். என் வீட்டை ஒட்டியிருக்கும் தாவத் உணவு விடுதி ஆடம்பரமாக இருக்கிறதே தவிர எதை வாங்கினாலும் அதில் நூறு மில்லி அளவுக்கு எண்ணெய் மிதக்கிறது. No exaggeration. நூறு மில்லி. என் வீட்டுக்கு எதிர்சாரியில் உள்ள பாம்ஷோர் தேவலாம். ஆனால் அங்கேயே சாப்பிட்டு சாப்பிட்டு … Read more