kaala songs…

காலா பாடல்களைக் கேட்டேன். இந்த நாட்டில் ஒரு சினிமாப் பாட்டைக் கூட சினிமாப் பாட்டாக எங்கே கேட்க முடிகிறது? இத்தனைக்கும் யோகி பி, சந்தோஷ் நாராயணன் இருவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்தான். ஆனால் காலா பாடல்கள் அனைத்தும் அரசியல் செய்திகளைக் கொண்டிருக்கின்றன. அடங்க மறுப்போம், புரட்சி செய்வோம் என்றெல்லாம் அறை கூவல் விடுக்கின்றன. ரஜினிதான் நம்மைக் காப்பாற்றப் போகின்றவர் என்று உரக்கக் கூவுகின்றன பாடல்கள். உலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகள் அனைத்தும் இதே மாதிரியான சொல்லாடல்களைக் … Read more

ஆண்டவன் நினைத்தால்…

சமீபத்தில் கோலா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி பேசியதை பத்திரிகையில் படித்தேன்.  அந்தப் பேச்சின் நடுவில் அரசியலுக்கு வர மாட்டேன் என்கிறார்.  பேச்சின் இறுதியில் ஆண்டவன் நினைத்தால் வருவேன் என்கிறார்.  வாயில் கெட்ட வார்த்தைதான் வருகிறது. தமிழ்நாடு என்ற இடத்தில் ஒரு படத்துக்கு 60 கோடி (அறுபது கோடியா, இல்லை, அதுக்கும் மேலயா?) ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் அரசியலில் நுழையலாமா வேண்டாமா என்று ஜோசியம் சொல்வதைத் தவிர ஆண்டவனுக்கு வேறு … Read more

நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை

தமிழ்நாட்டில் எழுத்தாளர் என்றால் கூட அர்த்தம் புரிந்து விடும். ஆனால் புத்திஜீவி என்றால் அப்படி ஏதும் புதியவை ஆர்கானிக் காய்கறி வந்துள்ளதா என்று கேட்பார்கள். தமிழ்நாட்டில் நான் வெகுவாக மதிக்கும் புத்திஜீவிகளில் ஒருவர் டி. தர்மராஜ். அவர் முகநூலில் எழுதியிருந்த இந்தச் சிறிய கட்டுரை நிர்மலா தேவி பிரச்சினையில் என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த விஷயம் என்னைப் பெரிதும் பாதித்து விட்டது. அந்த நான்கு மாணவிகளும் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப மறுத்தும் அந்த … Read more