கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகத்தின் கண்ணதாசன் விருது அடியேனுக்கும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ள செய்தியை முன்பே உங்களிடம் பகிர்ந்திருந்தேன். விழா வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவையில் மாலை ஆறேகால் மணிக்கு நடைபெறும். அழைப்பிதழை இங்கே இணைத்திருக்கிறேன். அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறேன். விழா நடக்கும் இடம்: சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை

பப்புவின் மறைவு…

நேற்று இரவு முகநூலில் எழுதிய குறிப்பு இது: 12 ஆண்டுகளாக என்னோடும் அவந்திகாவோடும் வாழ்ந்த பப்பு இன்று உயிர் நீத்தது. என்னை அதன் மரணத் துயரத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மூன்று மாதமாக உயிருக்குப் போராடி எங்கள் இருவருக்கும் பயிற்சி அளித்தது. அப்படியில்லாமல் ஸோரோ திடீரென்று ஒருநாள் இறந்து போனதால் மூன்று மாதம் நான் பைத்தியமாக வாழ்ந்தேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போனேன் என்பது கூட பிரச்சினை இல்லை. மூளை கலங்கிப் போனதுதான் கொடூரமாக இருந்தது. பைத்திய நிலை … Read more

தண்ணீர்

கடந்த முப்பது ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன்.  சென்னையில் வசிக்கிறேன் என்று பேர்தானே தவிர ஒவ்வொரு ஊருக்கும் உரிய ஏராளமான குணாம்சங்களோடு சென்னையை நான் அறிந்தவன் அல்ல.  சென்னையை விட எனக்கு தில்லி நன்றாகத் தெரியும்.  தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எனக்கு அத்துப்படி.  அதற்குக் காரணம், தில்லியின் நான்கு மூலைகளிலும் நான் வசித்திருக்கிறேன்.  கிழக்கு மூலையான கல்யாண்வாஸ், கல்யாண்புரி, திர்லோக்புரியின் (ஞாபகம் இருக்கிறதா?) எதிரே உள்ள மயூர் விஹார், மேற்கு மூலையான பொஸங்கிப்பூர், ஜனக்புரி, தெற்குப் பகுதியான … Read more

NGK

செல்வராகவனின் என்.ஜி.கே. பற்றி கடந்த இரண்டு தினங்களாக ஒரே போன் அழைப்புகள்.  ஒருவர் தன் பிறந்த நாள் அன்று அந்தப் படத்துக்குப் போய் செத்து சுண்ணாம்பாகி வந்திருக்கிறார்.  ராஜப் பிளவை.  எல்லோருமே புதுப்பேட்டை எடுத்த செல்வாவாயிற்றே என்கிறார்கள்.  அப்படி ஒரு கல்ட் ஃபில்மாகியிருக்கிறது புதுப்பேட்டை.  ஆனால் நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருப்பது போலவே தமிழ் இயக்குனர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவே மறுக்கிறார்கள்.  மேற்கில், ஹாலிவுட்டில் 80 வயதில் 20 வயது இளைஞன் எடுப்பது போல் எடுக்கிறான்.  மார்ட்டின் … Read more

ரத்தத்தின் பாதை

இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் இருந்த சுதந்திரம் அத்தனையும் போய் விட்டது. ஜேஎன்யூ போன்ற சர்வகலாசாலைகளில் இந்துத்துவாவின் ஊடுருவல் அதிகமாகி விட்டது. இது பற்றி நடுநிலையான புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் அறிஞர்களும் என்ன சொல்கிறார்கள் என்றே தெரிந்து கொள்ளாமல் மோடி ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருப்பது எனக்குக் கவலை அளிக்கிறது. மோடியை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள் எதற்காக இத்தனை கவலைப்படுகிறோம் என்று செவி கொடுத்துக் கேட்பதற்குக் கூட நியாயவாதிகள் தயாராக இல்லை. வாஷிங்டன் போஸ்டின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் … Read more