பெரூ – சீலே – பொலிவியா

ஒழுக்கம், நற்குணம் என்பதையெல்லாம் கடைப்பிடிப்பது மிகவும் எளிது.  ஆனால் தீமையின் பக்கம் வாழ்வதுதான் கடினமானது – அது தரும் அசாதாரணமான பாதை மற்றும் வலியின் காரணமாக.  ஓஷோ சொன்னார், பாவத்தைச் செய்வதே ஒரு தண்டனைதான் என்று.  முதலில் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ஏனென்றால், மற்றவர்கள் நமக்குத் தீங்கு செய்யும்போது நாம் ஏன் துன்பப்படுகிறோம்?  அவர்களை எப்படி நம்மால் மன்னிக்க முடியும்?  அடுத்தவர் நமக்குச் செய்யும் தீமையை என்னால் மறக்க முடியுமா?  என்னைப் பொறுத்தவரை, மன்னிப்பு … Read more

இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப்

இயக்கம்: தியேட்டர் நிஷா பாலகிருஷ்ணன் பாலா என்று நண்பர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணன் தில்லியின் புகழ்பெற்ற தேசிய நாடகப் பள்ளியிலும் பிறகு லண்டனின் Royal Court Theatre-இலும் நாடகம் பயின்றவர்.  பாலாவுக்கு நாடகம்தான் உயிர்மூச்சு.  அதில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் வாழ்பவர். இதன் பொருள், பலரைப் போல் சினிமாவுக்குப் போவதற்கான பாலமாக நாடகத்தைப் பயன்படுத்தாதவர். கடந்த 18 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி நடித்திருப்பவர்.  பாலகிருஷ்ணன் பற்றி அறிந்திருக்கிறேனே தவிர அவர் நாடகங்களை இதுவரை நான் … Read more

அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ்

சென்னையில் உள்ள எனக்குப் பிடிக்காத இடங்களில் ஒன்று, டாஸ்மாக் பார்.  ஆனால் டாஸ்மாக் பாரை விட அருவருப்பூட்டும் இன்னொரு இடம் அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ்.  காரணங்களை விவரிக்கிறேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஃப்ரெஞ்ச் தெரிந்த என் தமிழ் நண்பரிடம் என் நாவல்களில் ஒன்றை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.  அவரும் சிரத்தை மேற்கொண்டு அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் போய்ப் பார்த்தார்.  அங்கே உள்ள மொழிபெயர்ப்புத் துறையில் இருந்த நாலைந்து பெண்களும் மிகச் சமீபத்தில் நியூ ஜெர்ஸியிலிருந்து இறக்குமதியான … Read more

ராஸ லீலா – பிழை திருத்தம்

ராஸ லீலா பிழை திருத்தம் நாளை முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.  கொஞ்சம் முன்னால்தான் அதன் இரண்டாம் பாகத்தில் உள்ள 41-ஆம் அத்தியாயத்தில் திருத்தம் செய்து முடித்தேன்.  An Erotic Catharsis என்பது அதன் தலைப்பு.  இந்த இரண்டாம் பாகத்தில் சில பெண்கள் பெருமாளுக்கு எழுதும் கடிதங்களெல்லாம் சலிப்பூட்டுபவை என்று சில நண்பர்கள் என்னிடம் கூறியதுண்டு.  அப்படியா என்று வருத்தத்துடன் கேட்டுக் கொள்வேன்.  வேறு என்ன செய்ய?  துண்டித்துத் தூக்கிப் போட முடியுமா என்ன?  (சரியாகப் புரிந்து … Read more

ராஸ லீலா Collector’s copy – dedication

ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி பற்றி எழுதியிருந்தேன். சுமார் 20 பேர் 10,000 ரூபாய் பணம் அனுப்பி முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதியும் தனித்தனியாகத் தயாரிக்கப்படுவதால் ஒவ்வொரு பிரதியையும் தனித்தனி நண்பர்களுக்கு டெடிகேட் செய்ய முடியும். அப்படி டெடிகேட் செய்யும் போது யாருக்கு டெடிகேட் செய்கிறேனோ அவர்களைப் பற்றி சில வார்த்தைகள் எழுதலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இதுவரை மூன்று பேருக்கு எழுதியிருக்கிறேன். அதை உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்களைப் பற்றியும் எழுதுவேன். பதற்றம் கொள்ள … Read more

புதிய புத்தகங்கள்

ஒழுங்கின்மையின் வெறியாட்டம்: https://tinyurl.com/ozhungimayin *** கடவுளும் சைத்தானும்: https://tinyurl.com/kadavulum *** அஸாதி அஸாதி அஸாதி: https://tinyurl.com/y57ua7f7 *** மூடுபனிச் சாலை: https://tinyurl.com/yxlcyttl *** கனவுகளின் மொழிபெயர்பாளன்: https://tinyurl.com/kanavugalinmozhi