சென்னையின் மேட்டுக்குடி

இதை நான் எழுதியதாகவும் கொள்ளலாம். இப்படி நான் பகிர்வதனால் இதற்கு இப்போதைய போர்ச் சூழலில் வேறு அர்த்தங்களும் கற்பிக்கப்படும். ஒரு தோழர் ஜெயமோகன் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்த விருதை சாருவுக்குத் தருகிறார் என்று எழுதியிருந்தார். மிகவும் ரசித்தேன். எனக்கு விருது கொடுத்துத் தன்னை பலப்படுத்திக் கொள்ளும் நிலையிலா இருக்கிறார் ஜெயமோகன்? கற்பனைக்கும் ஒரு எல்லை வேண்டாமா? நான் எழுதியிருந்தால் இந்தக் கட்டுரையின் கடைசிப் பத்தியை மட்டும் எழுதியிருக்க மாட்டேனாயிருக்கும். அந்த இடத்தில் தனுஷ் பெயரைப் போட்டிருப்பேன். … Read more

சில குறிப்புகள்: போகன் சங்கர்

டால்ஸ்டாய் எழுதிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் Andrew Gide உம் எழுதிக்கொண்டிருந்தார். ஆந்த்ரே ஜீத்-இன் நாவல்கள் அதுவரை இலக்கியத்தில் இருந்த ஒழுக்க மதிப்பீடுகள் எல்லாவற்றையும் கவிழ்த்தவை.அவருடைய சில நாவல்கள் pedaresty எனப்படும் சிறுவர்களுடனான உறவை நேரடியாக விதந்தோதியவை. அது அவருடைய அரேபியக் கலாச்சரத் தொடர்பினால் ஏற்பட்ட பாதிப்பு என்கிறார்கள். மேலும் தன் பால் உறவை ஒரு லட்சியமாக முன் வைத்தவை அவர் நூல்கள். அது ஒரு கிரேக்கக் கலாச்சாரப் பாதிப்பு என்று சொல்லலாம். டால்ஸ்டாய் பிரஞ்சிலிருந்து வரும் இந்த … Read more

டார்ச்சர் கோவிந்தனுக்குப் பிடிக்காத சட்டை

நான் சட்டை நன்றாக இல்லை என்று சொல்லலப்பா, உங்களுக்குப் பொருந்தலை என்றுதான் சொன்னேன். இல்லியே. வினித் பிரமாதமா இருக்குன்னு சொன்னானே? சின்னப் பசங்கள்ளாம் அப்டித்தான் சொல்லுவானுங்க. என்ன விஷயம்னா அவனுங்க சொல்றது சட்டையை. உங்களை அல்ல. உடனே வினித்துக்கு போன் போட்டுக் கேட்டேன். விஷயத்தையும் சொன்னேன். இனிமேல் டார்ச்சர் கோவிந்தன் பற்றிப் பேசினால் நான் விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்ந்து விடுவேன். இதுதான் வினித்தின் பதில். மேலே படம்.

சாருவை ஏன் வெறுக்கிறார்கள்? அபிலாஷ் சந்திரன்

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெறும் சாரு நிவேதிதாவை வாழ்த்துமுன் சில கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தளவில் பதில் சொல்ல முயல்கிறேன்: சாரு எவ்வகையான எழுத்தாளர்? சாரு ஒரு எதிர்-புனைவாளர். எதிர்புனைவு என்றால் என்ன? சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை அழிக்கும் நோக்கில் உருவானதே எதிர்புனைவு. அலெ ராப் கிரில்லெ என ஒரு எழுத்தாளர் இருக்கிறார் (The Beach, Jealousy ஆகியவற்றை எழுதியவர்). அவர் இவ்வகை புனைவுகளை … Read more

அடியேனுக்கு விஷ்ணுபுரம் விருது…

2022ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது அடியேனுக்கு வழங்கப்படுகிறது.  இது குறித்த அறிவிப்பு கீழே உள்ளது.  இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்த ஜெயமோகனுக்கும் மற்ற விஷ்ணுபுரம் வட்டம் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  வழக்கம் போல் இது குறித்த வசைகளும் ஆரம்பித்து விட்டன.  வசைகளை ஜெயமோகனும் நானும் பகிர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  தேகம் நாவலில் நான் எழுதியதையெல்லாம் மேற்கோள் காண்பித்துத் திட்டுகிறார்கள்.  அந்த அளவுக்கு உன்னிப்பாகப் படித்திருக்கிறார்களே என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  இனிமேல் இது போன்ற வசைகளுக்கும் … Read more