நானும் சக எழுத்தாளர்களும்… (மற்றும்) நான்தான் ஔரங்ஸேப்… பற்றி பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

எனக்குக் கிடைத்திருக்கும் வரங்களில் ஒன்று, எனக்கு எந்த எழுத்தாளரையெல்லாம் ரொம்பப் பிடிக்கிறதோ அவர்களுக்கு என் எழுத்து பிடிப்பதில்லை.  ஏதோ பொது நாகரிகம் கருதியோ அல்லது அவர்களைப் பாராட்டுகிறேன் என்ற காரணத்திற்காகவோ கொஞ்சமாக சிரித்து, கொஞ்சமாகப் பேசுவார்கள். வேறு வழியில்லாமல்தான்.  இதை நான் அசோகமித்திரனிடம் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.  அவர் கடைசி வரை ஒரு தர்மசங்கடத்துடன்தான் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.  இருக்காதா பின்னே?  தன்னை தன் ஆசான் என்றும் தந்தை என்றும் வணங்கும் ஒருவனை ஒரு எழுத்தாளர் எப்படி முழுமையாகப் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு

இன்னும் சில சிறப்புப் பிரதிகள் கைவசம் உள்ளன.  என்னைப் பற்றிய ஆவணப் படத்துக்கான தயாரிப்புச் செலவுக்காகத்தான் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறேன்.  பூனை உணவுக்கான செலவில் ஒரு தொகையை ஏற்றுக் கொண்டிருந்த நண்பர் அதை நிறுத்திக் கொண்டு விட்டார்.  நான் யாரிடமும் தனிப்பட்ட முறையில் பணம் கேட்பதில்லை என்பதால் அதை அப்படியே விட்டு விட்டேன்.  இன்னொரு நண்பர் ஒரு சிறிய விபத்தில் மாட்டியதால் இன்னும் மூன்று மாதத்துக்கு அவரால் உதவ முடியாத நிலை.  ஆக, மாதம் இருபதாயிரம் ரூபாய் … Read more

தேவிபாரதியின் நொய்யல்

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நொய்யல் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு நாவலைப் படிக்க இத்தனைக் காலம் எடுத்துக் கொண்ட்து இதுவே முதல் முறை.  அந்த அளவுக்கு நான் அந்த நாவலில் மூழ்கிக் கிடந்தேன்.  அதிலேயே வாழ்ந்தேன்.  திரும்பத் திரும்பப் படித்தேன்.  நாவல் பற்றி இங்கே நான் மதிப்புரையெல்லாம் எழுதப் போவதில்லை.  பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் என்ற நாவலை உலகின் தலைசிறந்த ஐம்பது நாவல்களில் வைப்பேன் என்றால், தேவிபாரதியின் நொய்யலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றிலேயே முதல் … Read more

பசி மற்றும் இம்சை குறித்து ஒரு ஆட்டோஃபிக்ஷன் கதை (குறுநாவல்)

புகைப்படம்: ஒளி முருகவேள் 1.பச்சைக் கண் சனிக்கிழமை வாசகர் வட்ட சந்திப்பு முடிந்து எல்லோரும் அவரவர் இடத்துக்குக் கிளம்பி விட்டார்கள்.  நாங்கள் ஐந்து பேர் – நான், கொக்கரக்கோ, வினித், ஒளி முருகவேள், பாண்டியன் – மட்டுமே அந்த வன இல்லத்தில் தங்கியிருந்தோம்.  சந்திப்புக்கு வந்த நண்பர்கள் யாரும் இரவு எங்களோடு தங்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.  அது பற்றி நான் பலமுறை என்னுடைய இணையதளத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு எழுதியிருக்கிறேன்.  தங்கினால் பெரிய … Read more