புதிய எக்ஸைல்

  புதிய எக்ஸைல் நன்கு திருத்தப்பட்டு அச்சுப் பிழைகள் எதுவும் இல்லாமல் புதிதாக பேப்பர்பேக் எடிஷன் வெளிவந்துள்ளது.  விலை 700 ரூ. விபரம்: இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149413.html

ஏன் எனக்கு அறிவே இல்லை? – ஒரு சுய பரிசோதனை

கணித மேதை ராமானுஜன் பற்றிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ரொம்ப நன்றாக இருப்பதாக பி.ஏ. கிருஷ்ணன் சொல்லியிருந்ததால் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கப் போனேன்.  ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை.  தமிழில் எழுதப்பட்ட கட்டுரைதான்.  சரி, நமக்குத்தான் கணிதம் என்றால் ஒரு எழவும் புரியாதே என்று கீழே கீழே வரிகளைத் தள்ளிக் கொண்டு போனால் கடைசியில் நாகேஸ்வர ராவ் பூங்கா கணக்கு என்று ஒரு தலைப்பு இருந்தது.  பூங்கா என்றால் நல்ல வார்த்தைதான்.  ஆனால் அதோடு கணக்கு … Read more

முட்டாளின் பதில் தொடர்கிறது… (அநேகமாக இன்றே கடைசி!)

என் நண்பர் கணேஷ் அன்புவுக்கு இன்னும் ஒத்துக் கொள்ள முடியவில்லை போல.  வர்கலா பீச்சில் வைத்து இந்த விஷயத்தைப் பேசுவோம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.  சென்ற கட்டுரைகளில் அதிகாரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  அதிகாரம் என்றால் என்ன? நம் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர்.  மிகப் பெரிய பதவி.  நீங்கள் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சிப்பாய் உங்களைப் பார்த்து ஏய் இங்கே … Read more

நிர்பயா (2) – சொர்க்கத்தின் விதிகளை நரகத்தில் பேசாதீர்கள் நண்பர்களே!

நிர்பயா கட்டுரையின் தொடர்ச்சி இது: இந்தியா ஒரு நரகம்.  துப்புரவு தொழிலாளியின் சம்பளம் இங்கே 7000 ரூ.  என் பகுதியில் 5000 ரூ.  தினமும் அவர்கள் என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்கிறார்கள்.   50 ஆண்டுகளுக்கு முன்பே நாகூரில் நான் வாழ்ந்த சேரியில் சோற்றுப் பிச்சை.  இப்போது நவீன காலம்.  சோற்றுக்குப் பதில் ரூபாய்.  நூறு இருநூறு என்று.  மத்திய வர்க்க மென்பொருள் பொறியாளனின் ஊதியம் ஒன்றரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை.  இதே சென்னையில். … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங்

முகநூலில் நண்பர் கார்ல் மேக்ஸின் பதிவைப் படித்தேன்.  அவரது பதிவுகள் எப்போதுமே எனக்கு அந்தக் காலத்து நிறப்பிரிகை கட்டுரைகளை நினைவுபடுத்துகின்றன.  முதலில் கார்ல் மேக்ஸ்: நிர்பயா வன்கொலையில் பங்குபெற்ற சிறுவன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்படும் நிகழ்வையொட்டி நேற்று சமூகவலைத்தளங்களில் நிலவிய ”மத்தியதர வர்க்க மனநிலையின் வன்முறை” அச்சமூட்டுவதாக இருந்தது. நிர்பயாவின் மரணம் யாரையும் கண்ணீர் சிந்தச்செய்யும் கொடுமைதான். அவள் எதிர்கொண்ட வன்முறையும், அதன் வழியே அடைந்த நிராதரவான மரணமும் எல்லா மனங்களையும் அசைக்கக் கூடியதே. அந்த … Read more