கமீலா

கமீலா கபேயோ (Camila Cabello) கூபாவில் பிறந்தவர் எனினும் சிறு வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியவர்.  பிறவிப் பாடகி.  இவரது பாடும் முறையைக் கேட்கும் போது எனக்கு மைக்கேல் ஜாக்ஸன் ஞாபகம் வருகிறது.  முக்கியமாக ஹபானா என்ற பாடலையும் Crying in the Club என்ற பாடலையும் கேட்டுப் பாருங்கள்.  அமெரிக்கா வந்தால் கமீலாவின் லைவ் கான்ஸர்ட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  அமெரிக்க வாழ் நண்பர்கள் யாரேனும் இந்த மகத்தான பாடகியைக் கேட்டிருக்கிறீர்களா?