சீலே – 2 To Bury Our Fathers…

ஹோர்ஹே பார்ரோஸ் தொர்ரியல்பா (Jorge Barros Torrealba) சந்த்தியாகோவிலுள்ள ஒரு புத்தக வெளியீட்டாளர். செப்டம்பர் 11, 1973லிருந்து 1988 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் பத்துக்கு ஒருவர் வீதம் சீலேயை விட்டு வெளியேறினார்கள். அதிபர் சால்வதோர் அயெந்தேயின் ஆட்சியில் பார்ரோஸ் அரசாங்கப் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். பிறகு அயெந்தே கொல்லப்பட்ட பிறகு இவரும் மற்றவர்களைப் போலவே நாட்டை விட்டு வெளியேறினார். 1976இலிருந்து 1980 வரை வெனிஸுவலாவில் இருந்தார். 1978 இல் சீலேயில் அடக்குமுறை அதன் உச்சகட்டத்தை எட்டியது. … Read more

சீலே – 1

ஒருவேளை நான் சீலே போகாமலேயே இறந்து போக நேர்ந்தால் ஆவியாக வந்து உன்னை பயமுறுத்துவேன் என்று அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு.  காரணம், இருபது ஆண்டுகளாக நான் சீலே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.  இருபது ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது.  அதிலும் கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக முயன்றேன்.  முடியவில்லை.  ஆண்டுகள் செல்லச் செல்ல சீலே பயணத்துக்கு என் உடல்நிலை வேறு தன் தகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.  இப்போது என்னால் மலையேறுவது கடினம்.  … Read more