அறம் தொலைத்த சமூகம் (2)

ரகு என் புத்தகங்களில் ஒன்றை மொழிபெயர்த்தவர்.  100 பக்க புத்தகம்.  இதற்கு சன்மானமாக ஒரு தொகை கொடுக்க வேண்டுமானால் 5000 ரூ. கொடுக்கலாம்.  ஒரு பக்கத்துக்கு 50 ரூ.  உண்மையில் ஒரு வார்த்தைக்கு 50 ரூ. கொடுப்பதுதான் நியாயம்.  ஆனால் 20 பிரதிகள் விற்கும் ஒரு சமூகத்தில் பக்கத்துக்கு அம்பது கொடுப்பதுதான் சாத்தியம்.  நண்பரிடம் பணம் வேண்டுமா என்று கேட்டபோது வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி புத்தகம் போடும் பதிப்பக நண்பருக்கு … Read more

அறம் தொலைத்த சமூகம் (1)

பொதுவாக நான் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் பேசுவதில்லை; பழகுவதும் இல்லை.  அந்த விதியை மீறினால் எனக்கும் பிரச்சினை; அவர்களுக்கும் பிரச்சினை.  என்ன பிரச்சினை?  ஒரு சில உதாரணங்களைச் சொல்கிறேன்.  20 ஆண்டுகளுக்கு முன்பு என் தங்கை கேட்டாள், ”ஏன்ணே இன்னும் வீடே வாங்கல?”  இந்தத் தங்கையையே நான் ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பார்க்கிறேன்.  முதல் கேள்வியே இதுதான்.  கடைசிக் கேள்வியும் அதுதான்.  அதற்கு மேல் அவளை நான் சந்திக்கவே இல்லை.  இந்தக் கேள்வியில் என்ன தவறு என்று … Read more